Muaad Bin Jabal Arabic college

Muaad Bin Jabal Arabic college Muaad Bin Jabal Arabic college

🌿 அருள்நபி முஹம்மது ﷺ 🌿அருளும், அன்பும், அழகிய முன்மாதிரியும் நிறைந்தஅண்ணல் நபி ﷺ அவர்களின் வாழ்க்கையை அறிந்து,அவர்களின்...
25/08/2026

🌿 அருள்நபி முஹம்மது ﷺ 🌿

அருளும், அன்பும், அழகிய முன்மாதிரியும் நிறைந்த
அண்ணல் நபி ﷺ அவர்களின் வாழ்க்கையை அறிந்து,
அவர்களின் ஸுன்னாவை நேசித்து,
அதனை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவோம். 🤍

اللهم صل وسلم وبارك على نبينا محمد ﷺ

🌙 நபியை நேசிப்போம்…
நபியின் வழியில் வாழ்வோம்… 🌙

#முஹம்மதுﷺ #அருள்நபி #ஸுன்னா #இஸ்லாம் #நபிமொழி

🌿📖 அல்ஹம்துலில்லாஹ்! புனித அல்குர்ஆனின் 30 ஜுஸ்உக்களையும் முழுமையாக மனனம் செய்து நிறைவு செய்த சிறப்பான சாதனை 📖🌿அல்லாஹ்வி...
18/08/2026

🌿📖 அல்ஹம்துலில்லாஹ்! புனித அல்குர்ஆனின் 30 ஜுஸ்உக்களையும் முழுமையாக மனனம் செய்து நிறைவு செய்த சிறப்பான சாதனை 📖🌿

அல்லாஹ்வின் உதவியாலும் பேரருளாலும், எமது Muaad Bin Jabal Arabic College அரபுக் கல்லூரியில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அல்குர்ஆன் மனனப் பிரிவில் இணைந்து, ஷரீஆ பாடங்களையும் முறையாகக் கற்று, தனக்கு வழங்கப்பட்ட ஜுஸ்உக்களை அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடனும் மனனம் செய்து, புனித அல்குர்ஆனின் 30 ஜுஸ்உக்களையும் முழுமையாக மனனம் செய்து நிறைவு செய்துள்ளார் புல்மோட்டையைச் சேர்ந்த மாணவர்

✨ அலி ரஜாய் தீன் முஹம்மது ருஷ்தி
Ali Rajai Deen Muhammed Rusdhy ✨

இம்மாணவர் தனது கல்விப் பயணத்தில் நற்குணம், நல்லொழுக்கம், பணிவு, பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கம் போன்ற சிறந்த பண்புகளைக் கொண்டவராக விளங்கி வருவது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கின்றது.

இம்மாணவரின் ஆரம்பக் கல்விக்காக வழிகாட்டிய உஸ்தாத்மார்களுக்கும், அதன் பின்னர் அவரது கல்விப் பயணத்தில் வழிகாட்டிய உஸ்தாத்மார்களுக்கும், தற்போது அல்குர்ஆன் மனனம் மற்றும் ஷரீஆ கல்வியில் வழிகாட்டி வருகின்ற உஸ்தாத்மார்களுக்கும், இம்மாணவரின் இந்த உயரிய சாதனைக்குப் பின்னால் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும், எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான நற்கூலிகளை வழங்குவானாக.

அவர்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுள், தேக ஆரோக்கியம், பரக்கத் நிறைந்த வாழ்க்கை மற்றும் ஈருலக நன்மைகளையும் அல்லாஹ் அருள்வானாக. 🤲

இம்மாணவர் மனனம் செய்த புனித அல்குர்ஆனை வாழ்நாள் முழுவதும் தனது உள்ளத்தில் பாதுகாத்து, அதன் போதனைகளின்படி வாழவும், கல்வி, மார்க்க அறிவு, நல்லொழுக்கம் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் மேலும் உயர்ந்த நிலைகளை அடையவும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

அவரது எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக்கி, அறிவிலும் அமலிலும் பரக்கத் வழங்கி, தீனுக்கும் சமூகத்திற்கும் பயனுள்ள சிறந்த மனிதராகவும், பெற்றோர்களுக்கும் உஸ்தாத்மார்களுக்கும் பெருமை சேர்க்கும் மாணவராகவும் அல்லாஹ் அவரை ஆக்குவானாக.

🤲 ஆமீன்! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்.

🌿📖 Alhamdulillah! A Remarkable Achievement in Completing the Memorization of All 30 Juz of the Holy Qur’an 📖🌿By the help...
18/08/2026

🌿📖 Alhamdulillah! A Remarkable Achievement in Completing the Memorization of All 30 Juz of the Holy Qur’an 📖🌿

By the help, mercy, and grace of Almighty Allah, Ali Rajai Deen Muhammed Rusdhy, a student from Pulmoddai, who joined the Qur’an Memorization (Hifz) Division of Muaad Bin Jabal Arabic College in September 2025, has successfully completed the memorization of all 30 Juz of the Holy Qur’an.

Alongside his Hifz studies, he has also been studying Shariah subjects in a systematic manner. Through sincere dedication, perseverance, discipline, and continuous effort, he faithfully memorized the portions assigned to him and has now successfully completed the entire Holy Qur’an.

✨ Ali Rajai Deen Muhammed Rusdhy ✨

Throughout his educational journey, he has continued to demonstrate admirable qualities such as good character, excellent manners, humility, responsibility, and discipline. His achievement brings us immense happiness and pride.

We sincerely pray that Almighty Allah grants abundant rewards to all the Ustadhs who guided him during his early education, those who supported and guided him throughout the different stages of his educational journey, and the Ustadhs who are currently guiding him in Qur’an memorization and Shariah education.

We also pray especially for his beloved parents, whose love, sacrifices, encouragement, and unwavering support have played an invaluable role behind this noble achievement.

May Almighty Allah grant them all long lives, good health, a life filled with Barakah, and goodness and success in both this world and the Hereafter. 🤲

May Allah enable this student to preserve the Holy Qur’an in his heart throughout his entire life, live according to its teachings, and continue to attain greater heights in education, Islamic knowledge, good character, and service to society.

May Allah bless his future, place Barakah in his knowledge and righteous deeds, and make him a person who is beneficial to the Deen and the community.

May Allah make him a source of pride and happiness to his parents, Ustadhs, teachers, and the institution, and guide him to become an exemplary individual who serves Islam and society with knowledge, sincerity, and good character.

🤲 Ameen! Ameen! Ya Rabbal ‘Alameen.

وَكَانَ بَعْضُ الْمُتَقَدِّمِينَ إِذَا ذَهَبَ إِلَى مُعَلِّمِهِ، تَصَدَّقَ بِشَيْءٍ، وَقَالَ: اللَّهُمَّ اسْتُرْ عَيْبَ ...
11/08/2026

وَكَانَ بَعْضُ الْمُتَقَدِّمِينَ إِذَا ذَهَبَ إِلَى مُعَلِّمِهِ، تَصَدَّقَ بِشَيْءٍ، وَقَالَ: اللَّهُمَّ اسْتُرْ عَيْبَ مُعَلِّمِي عَنِّي، وَلَا تُذْهِبْ بَرَكَةَ عِلْمِهِ مِنِّي.

التبيان في آداب حملة القرآن للنووي: ٤٧

காலத்தின் குரல்அறிவு என்ற பெயரில்அறியாமை விதைக்கப்பட்டது;நாகரிகம் என்ற பெயரில்நாணம் அழிக்கப்பட்டது.தங்களை காக்கத் தகுதிய...
10/08/2026

காலத்தின் குரல்

அறிவு என்ற பெயரில்
அறியாமை விதைக்கப்பட்டது;
நாகரிகம் என்ற பெயரில்
நாணம் அழிக்கப்பட்டது.

தங்களை காக்கத் தகுதியானோர்
அமைதியாய் பின்வாங்கினர்;
தலைக்கனம் கொண்டவர்கள்
தமக்குத் தாமே பட்டம் சூட்டினர்.

ஆணவம் உச்சம் தொட்டு,
ஆலிம்கள் புறக்கணிக்கப்பட்டனர்;
மடமையை ஒழிக்க வேண்டும் என்ற பெயரில்
மடையர்கள் ஒன்றிணைந்தனர்.

Riskan (muaadi)

Muaad Bin Jabal Arabic college

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.2026-08-09 நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில்  அனைத்து மாணவச்...
08/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

2026-08-09 நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் அனைத்து மாணவச் செல்வங்களும் ஆரோக்கியமாகவும் தைரியமாகவும் பரீட்சைக்கு முகம் கொடுத்து, அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடைகளை எழுதி சிறந்த பெறுபேறுகளைப் பெற அல்லாஹ் அருள் புரிவானாக!

அல்லாஹ் உங்கள் பரீட்சையை இலகுவாக்கி, வெற்றியையும் சிறந்த சித்தியையும் வழங்குவானாக!

ஆமீன் ஆமீன்.

Muaad Bin Jabal Arabic College
Thurukkaragama, Kahatagasdigiliya

Muaad Bin Jabal Arabic college

01/08/2026
Muaad Bin Jabal Arabic collegeThurukkaragama, Kahatagasdigiliya
30/07/2026

Muaad Bin Jabal Arabic college
Thurukkaragama, Kahatagasdigiliya

كلية معاذ بن جبل العربية Muaad Bin Jabal Arabic collegeThurukkaragama, Kahatagasdigiliyaஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக...
26/07/2026

كلية معاذ بن جبل العربية
Muaad Bin Jabal Arabic college
Thurukkaragama, Kahatagasdigiliya

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18வது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று (25) வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதில் எமது முஆதிப்னு ஜபல் அரபுக் கல்லூரியின் பழைய மாணவர்களான:

Ash Shaikh Ahsan (Muaadi) (BA)
Ash Shaikh Riyas (Muaadi) (BA)

ஆகியோர் தங்களது பட்டங்களைப் பெற்றுக்கொண்டமை எமக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

எமது இம்மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவர்களை இவ்வுயரிய நிலையை அடைய வழிநடத்திய பெற்றோர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும், எமது மாணவர்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் நற்சேவை புரியும் சிறந்த பிரஜைகளாக உயர்ந்து விளங்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.

வல்ல அல்லாஹ் அறிவிலும், இறையச்சத்திலும், சமூகப் பணியிலும் உயர்வடைய அருள் புரியட்டும்.

Address

Thurukkaragama
Kahatagasdigiliya

Telephone

+94775648385

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muaad Bin Jabal Arabic college posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category