01/11/2024
எங்கள் தலைவன்
தலைவர் இருக்கிறார், இந்தா மாவீரர் நாளுக்கு வாறார், மே 18 க்கு வாறார் என்று கொஞ்சப் பெருசுகளும் இல்லை தலைவர் உயிரோடை இல்லை மே 17 அவர் வீரமரணம் என கொஞ்சப் பெருசுகளும் மே 18 வீரமரணம் என கொஞ்சப் பெருசுகளும் மே 19 வீரமரணம் என கொஞ்சப் பெருசுகளும் குழுக்குழுவாக மக்களைக் குழப்பிக் கொண்டிருக்க…
இந்த அலப்பறைகளுக்குள் அகப்படாமல் தலைவரை இதயத்தில் இருத்தி செய்ய வேண்டியதை தத்தமது சொந்த முயற்சியில் சொந்த உழைப்பில் சொந்தப் பணத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள் பல அக்னிக் குஞ்சுகள்.
தலைவர் இட்ட தீயின் நெருப்புத் தணல் இன்னும் நூரவில்லை அது நூரவும் செய்யாது என்பதற்கு இந்த அக்னிக் குஞ்சுகளே சாட்சி.
தலைவரின் 70 ஆவது அகவை நாளுக்காக லண்டனில் இருந்து சந்தோஷ் என்னும் இளைஞன் செய்திருக்கும் இசை வேள்வியின் முன்னோட்டத்தைப் (Trailer) பார்த்து பிரமித்துப் போய் இந்தப் பதிவை எழுதுகிறேன்.
வரிகள், வசனங்கள் எதுவும் இன்றி பல்வேறு நாட்டு இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு சிம்பொனியை உருவாக்கியிருக்கிறான் இந்த இளைஞன்.
அதற்கு “எங்கள் தலைவன்” எனப் பெயரிட்டுள்ளான்.
“வரியில்லாமல், ஒரு சொல் இல்லாமல் எப்படி?
அப்படி என்னதான் இருக்கும் இந்த சிம்பொனி இசையில்?”
என்று கேட்டேன் அந்த இளைஞனிடம்.
அவன் சொன்னான்,
“தலைவர் என்னிடம் ஏற்படுத்திய வியப்பு இருக்கும், பிரமிப்பு இருக்கும், வீர உணர்வு இருக்கும், விடுதலைக்கான வேட்கை இருக்கும், தமிழ் மீதான தீராக் காதல் இருக்கும், அவர் மீதான அதியுயர் மதிப்பு இருக்கும்…”
தலைவர் இட்ட தீ தணியவில்லை!
வாழ்த்துகள் சந்தோஷ்! Santhors JP
https://youtube.com/shorts/laWL8RZFWu8?si=L-B7CYe1p1GK8BhB