21/04/2026
10 ஆம் ஆண்டு நினைவலைகள்.
அப்பா.
ஆண்டுகள் பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால் வடியும்
கண்ணீரும் காயவில்லை.
பாசமழை பொலிந்து.
நேசமாய் எனை வளர்த்து.
துனிவுடனே நான் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எனை விட்டு சென்றதெங்கே?
காலங்கள் கடந்து போகும்.
ஆனால் உங்கள் நினைவுகள்
மட்டும் காலம்தனை வென்று
எம்மிடத்தில் நிற்கும்.
எம் கண்ணிறைந்த
கண்ணீரோடு அப்பா.
இன்றுடன் பத்தாண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள் நினைவுகள் என்றென்றும்
எனை விட்டகலாது.
உங்கள் ஆத்மா இறையடியில் சாந்தியடைய எல்லோர்க்கும் பொதுவான இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றேன்…
ஓம் சாந்தி.
ஓம் சாந்தி..
ஓம் சாந்தி…