06/04/2025
கடும் வெயிலில் மக்கள் தண்ணீருக்கே தவிக்கும் சூழலில், பழவேலி தீமுக கழக உடன்பிறப்புகள் சமூகத்தின் நலனை கருதி முன்னேறினர். கடந்த 20 நாட்களாக தண்ணீர் பந்தல் அமைத்து, தினமும் குடிநீர், நீர்மோர், தர்பூசணி, ரோஸ்மில்க் போன்ற குளிர்பானங்களை வழங்கி வருகின்றனர். வெயிலை மைய்யாக்கும் இப்பணியால், ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இது உண்மையான சமூகப் பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், சமூக நலன் கருதி தொடங்கப்பட்ட இந்த நன்னடத்தை, அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.