Chakrarajan07

Chakrarajan07 performing kainkaryam at this temple.

எல்லாத்துக்கும் RSS தான். பிஜேபி தான். இவன் கக்கூஸ் போறதுல இருந்து எல்லாத்துக்கும் காரணம்.
25/05/2026

எல்லாத்துக்கும் RSS தான். பிஜேபி தான். இவன் கக்கூஸ் போறதுல இருந்து எல்லாத்துக்கும் காரணம்.

25/05/2026
24/05/2026

முரசொலி மாறன் இருந்திருந்தால் திமுக இப்படி திசைதடுமாறிய கப்பலாக போயிருக்காது.

திமுகவை தவறாக வழிநடத்தியது காங்கிரஸ் என்பதைக் காட்டிலும் கம்யூனிஸ்டுகள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டுக்கு உதயநிதியை அழைத்தார்கள். அங்குதான் உதயநிதி அந்த வரலாற்றுத் தவறைச் செய்தார்.

"சநாதனம் என்பது டெங்கு மலேரியா போல ஒழிக்கப்பட வேண்டியது"- என்று பேசினார்.

இது வட மாநிலங்களில் அதிர்வலைகளை உண்டு பண்ணியது. கமல்நாத் (காங்கிரஸ்) போபாலில் நடைபெற இருந்த இ.ன்.டி கூட்டணி மீட்டிங்கையே ரத்து செய்தார்.

மேலும் அதி தீவிர வடவர் எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு ("ஹிந்தி தெரியாது போடா") போன்றவற்றை முன்னெடுத்தது திமுக.

அரை வேக்காடு அமைச்சர்களும், கனிமொழி போன்ற கற்றுக் குட்டிகளும் வடவர் எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, திருப்பதி வெங்கடாசலபதி குறித்த விமர்சனம் இதை எல்லாம் செய்வதற்கு முரசொலி மாறன் அனுமதித்து இருக்க மாட்டார்.

பொருளாதாரத்தில் தாராளமயம், தனியார் மயம், உலகமயம் போன்ற கொள்கைகளுக்கு திமுகவில் இருந்த தீவிர ஆதரவாளர் அவர்.

இந்த "காம்ரேட்" வகையறாக்களை எல்லாம் கிட்டவே சேர்க்கமாட்டார்.

அவர் ஒரு "கார்பரேட்" அரசியல்வாதி - கட்சிக்கும் எது லாபம் தருமோ அதை மட்டும் சிந்திக்கும் அரசியல்ரீதியான MARKETING STRATEGIST முரசொலி மாறன்.

1996 - ல் திமுக இடதுசாரிகளோடு இணைந்து தேவகவுடாவின் ஐக்கிய முன்னணி அரசை உருவாக்கியது - அதில் பங்கும் வகித்தது. அந்த அரசு உருப்படியாக ஓடவில்லை. பிறகு குஜ்ரால் வந்தார் - அதுவும் நீடிக்கவில்லை.

வெளியில் இருந்து ஆதரித்த காங்கிரஸ் - ஜெயின் கமிஷன் அறிக்கையை காட்டி திமுகவை கூட்டணியில் இருந்து விலக்கி வைக்க அழுத்தம் கொடுத்தது.

பார்த்தார் மாறன் - 1998 ல் அதிமுக கூட்டணியில் பாஜக தமிழகத்தில் காலூன்றிய வேகத்தைக் கணக்குப் போட்டார். திருச்சிக்கு தொடர்பே இல்லாத ரங்கராஜன் குமாரமங்கலம் அங்கே போட்டியிட்டு - தமாகாவின் வலிமை மிக்க எல்.அடைக்கலராஜை வீழ்த்தியதை கணக்கிட்டார்.

இஸ்லாமியத் தீவிரவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட கோவை குண்டுவெடிப்பு சம்பவம் (1998) திமுக ஆட்சிக்கு ஏற்படுத்திய அவப்பெயர் - சங்கடங்களை மாறன் கணக்குப் போட்டார்.

"போங்கடா உங்களுடைய இடதுசாரி, முற்போக்கு, மதச்சார்பற்ற வெங்காய கோஷங்களும் நீங்களும்"- என்று விளாசிவிட்டு - அதிமுக எப்போது வாஜ்பாய் அரசை கவிழ்த்ததோ அடுத்த கணமே திமுகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் கொண்டு வந்து இணைத்து விட்டார்!

அப்போது முரசொலியில்- "RSS என்பது திக போல ஒரு சமுதாய இயக்கம் - அது வெறுக்கப்பட வேண்டியது அல்ல"- என்று கருணாநிதி எழுதும் அளவுக்கு முரசொலி மாறனின் வழிகாட்டல் இருந்தது.

மாறன் மறைவுக்கு இறுதி நிகழ்ச்சியில் வாஜ்பாயும் - குஜ்ராலும் ஒரே காரில் வந்து திரும்பியதுதான் தாமதம்.

உடனே இடதுசாரிகள் கருணாநிதிக்கு தூபம் போட்டு - UPA என்ற கண்றாவி கூட்டணிக்கு திமுகவை இழுத்துச் சென்றார்கள்.

அன்றிலிருந்து தொடங்கியது திமுகவின் தத்துவரீதியான வீழ்ச்சி - இடது சாரிகளை நம்பி அவர்கள் வழிகாட்டலில் போனதன் விளைவு இன்று முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.

முரசொலி மாறன் இருந்திருந்தால் இப்படி கிறிஸ்தவ மிஷனரிகளின் பிடியில் திமுக அரசு இயங்குவதை எல்லாம் விட்டிருக்க மாட்டார்.

அவருக்கு சிறுபான்மையினரை எந்த அளவு தாஜா செய்ய வேண்டும் - எந்த எல்லை தாண்டி அனுமதிக்கக் கூடாது என்பது நன்றாகவே தெரியும்.

குறிப்பாக இடதுசாரிகளை அறிவாலய கேட் வாசல் பக்கமே அனுமதித்து இருக்க மாட்டார்.

WITHOUT MURASOLI MARAN DMK BECAME A RUDDERLESS SHIP! Thanks: Mr Murali Seetharaman

24/05/2026

பெறுநர்

மாண்புமிகு அமைச்சர்
இந்து சமய அற நிலையத்துறை
தமிழ் நாடு அரசு

அய்யா

வணக்கம்

துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு வாழ்த்துகள்

துறை செயல்பாடுகளில் முன்னேற்றம் தொடர்பாக சில கருத்துகளை தங்கள் பரிசீலனைக்கு முன் வைக்க விரும்புகிறேன்

இந்து சமய அறநிலையத்துறை என்பது வெறும் கோவில் நிர்வாகத் துறை அல்ல.
அது ஒரு நாட்டு நாகரிக நினைவகம், ஆன்மீக அமைப்பு, கலாச்சாரப் பாதுகாப்பு மையம், சமூக ஒற்றுமையின் அடித்தளம், ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரியத்தின் உயிரோட்டம்.

ஒரு அமைச்சர் இந்தத் துறையை சிறப்பாக நடத்த வேண்டுமெனில்,

“கோவில் வருமானம்” என்ற அளவில் அல்ல,
“நாகரிக பாதுகாப்பு மற்றும் பக்தர் நம்பிக்கை நிர்வாகம்” என்ற உயர்ந்த கோணத்தில் பார்க்க வேண்டும்.

1. முதன்மை நிர்வாகக் கொள்கையாக கடைபிடிக்க வேண்டியவை

கோவில் என்பது:

அரசின் அலுவலகம் அல்ல
அரசியல் மேடை அல்ல
வருமான மையம் மட்டும் அல்ல
மக்கள் ஆன்மீக நம்பிக்கையின் உயிர் மையம்

இதை மேஂம்படுத்துவது என்பது பக்தர்களின் நம்பிக்கை + பாராம்பரிய உணர்வுகள் சார்ந்தது . அதனை மனதில் கொண்டு நிர்வாகச் சீர்திருத்தமும், தொழில் நுட்பம் சார்ந்த உதவியும் அமைய வேண்டும்

2. கோவில் சொத்து பாதுகாப்பு

பல கோவில்களின்:

நிலங்கள்
குளங்கள்
மாட வீதிகள்
ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகள்
பழைய ஆவணங்கள்

முழுமையாக டிஜிட்டல் பதிவேடு செய்யப்பட வேண்டும்.

செய்ய வேண்டியது:

மாநில அளவிலான “Temple GIS Mapping”
ஒவ்வொரு கோவில் சொத்துக்கும் Unique ID
ஆன்லைன் பொதுமக்கள் பார்வை வசதி
ஆக்கிரமிப்பு கண்காணிப்பு பிரிவு
மாவட்ட வாரியான சட்டப் பிரிவு

இதைச் செய்தால் :

கோவில் சொத்து திருட்டு குறையும்
வருமானம் உயரும்
ஊழல் குறையும்

3. பக்தர்கள் கோவில் வருகை அதை தொடர்பான நிர்வாகம்

இன்று மக்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்:

நீண்ட வரிசைகள்
கூட்ட நெரிசல்
தரமற்ற குடிநீர்
கழிப்பறை சீர்கேடு
தரிசன குழப்பம்
தகவல் இல்லாமை

( குறிப்பு : கூட்ட நெரிசல் மேலாண்மை தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நீண்ட வாட்சப் மெசேஜ் அனுப்பியுள்ளேன்)

4. கோவில் வருமானம் தொடர்பாக அர்சின் வெளிப்படைத் தன்மை

கோவில் வருமானம் தொடர்பாக Temple Financial Transparency Portal ஒன்றை உருவாக்கி அதில்

தினசரி உண்டியல் வருமானம்
மாதாந்திர செலவுகள்
புனரமைப்பு பணிகளில் காண்டிராக்டர் ஒப்பந்தங்கள்
உபயதாரர்கள் உபயம் tracking
தணிக்கை அறிக்கைகள்

இவற்றை live dashboard போல பக்தர்கள் மக்கள் பார்க்கும்படி அமைக்கவும்

5. கோவில் அர்ச்சகர்கள் & ஊழியர்கள் பெரும்பாலும்

குறைந்த சம்பளம்
பயிற்சி இல்லாமை
நலத்திட்ட குறைபாடு

என்ற அளவில் பணி செய்கின்றார்கள்

அர்சகர்களுக்கான பயிற்சி ஆகம விதிகள் பூஜை விதிகள் குறித்து
மொழி & பக்தர் தொடர்பு பயிற்சி
மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியம்
ஹெல்த் இன்ஷீரன்ஸ்
குடும்ப நலத்திட்டங்கள்

என்று திட்டமிட்டு ஏற்படுத்தலாம்

6 கோவில் பாரம்பரிய பாதுகாப்பு

பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான:

கல்வெட்டுகள்
ஓவியங்கள்
சிற்பங்கள்
palm leaf manuscripts

அழிந்து வருகின்றன. இவற்றைப் பாதுகாக்க டிஜிட்டல் மியூசியங்கள் அமைக்கப்படவேண்டும்

7 கோவில் சார்ந்த பொருளாதார வளர்ச்சி

பெரிய கோவில்களை சுற்றி:

சிறு தொழில்கள்
பூ வியாபாரம்
கைவினை
பிரசாதம்
சுற்றுலா

என்று வளர இயலும். இதனை ஒழுங்கே முறைப்படுத்தி
Temple Economy Zones
local artisan markets
hygienic annadhanam systems
women SHG participation
eco-friendly prasadam packaging

என்பதாக திட்டமிட்டு அமைக்கலாம்

8 ஆன்மீகம், கலாச்சார, பண்பாட்டை இளைஞர்களுக்கு கொண்டு செல்லுதல்

இன்றைய இளைஞர்கள் கோவில்களை ஆன்மீக மையமாக அல்ல
விழா அல்லது சுற்றுலா இடமாக மட்டுமே பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

அவர்களின் சமகால தொழில் நுட்ப, பன்னாட்டு அறிவைக் கருத்தில் கொண்டு

temple history digital museums
guided heritage tours
மாணவர்களுக்கு கலாச்சார வகுப்புகள்
devotional music training
தமிழ் தேவாரம், திவ்ய பிரபந்தம் பயிற்சி

என்பதாக முயற்சி செய்யலாம்

9. கோவில் நிர்வாகத்தில் நிதி செயல்பாட்டில் ஊழலைத் தவிர்க்க

தகுதியான தணிக்கையாளர்கள்
ஓய்வு பெற்ற நீதிபதிகள்
நிதி வல்லுனர்கள்
பக்தர்களின் பிரதி நிதிகள்

என குழுக்கள் அமைத்து நிர்வாகத்தை சீர் செய்ய வேண்டும்

10 மாவட்ட வாரியான மதிப்பீட்டு முறை

அமைச்சர்:

மாதந்தோறும் மாவட்ட ஆய்வு
surprise inspection
devotees feedback review
social audit

செய்ய வேண்டும்.

இதில் மதிப்பீடுகளுக்கு உள்ளூர் கட்சிக்காரர்கள் பேச்சு கேட்காமல்
பக்தர் திருப்தி
வருமான உயர்வு
சுத்தம்
பாதுகாப்பு
crowd management
corruption complaints
heritage conservation progress

என்று சப்ஜெக்ட் மட்டும் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும்

ரங்கநாதன் உங்களுக்கு துணை வர வேண்டும்

கேசவன்தமர்க்கீழ்மே லெமரேழெழுபிறப்பும்,
மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா,
ஈசனென்கருமாணிக்கமென் செங்கோலக்கண்ணன்
விண்ணோர் நாயகன், எம்பிரானெம்மான்நாராயணனாலே

எல்லோருக்கும் தலைவனான பெருமாளை, வணங்கியவர்கள் பெரும்பேறு பெற்றார்கள் . நாமும் பெருமாளை அப்படியே வணங்கி வாழ்வோம் என சொல்வது திருவாய் மொழி தந்த வேதம் தமிழ் செய்த மாறன். நன்றி :: திரு chandramouleeswaran an viswanathan.

20/05/2026

"பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது".

📶செய்தி:

நேற்றைய தினம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரஜினி பேசியது:

"தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னப் பத்தி சோஷியல் மீடியால அரசியல் உலகத்தில சில விமர்சனங்கள் பரவிட்டு இருக்கு. அதுக்கு நான் விடை குடுக்கலேன்னா அது உண்மைன்னு ஆயிடும்".

"ஃபர்ஸ்ட் வந்து தேர்தல் முடிவுகள் வந்ததும் நான் வந்து ஸ்டாலின் சாரை நான் போய் பாத்தது. அதுக்கு கொஞ்சம் விமர்சனங்கள் வந்தது".

"ஸ்டாலின் சார் என்னோட நண்பர். 38, 40 ஆண்டு கால நண்பர். எங்கள் நட்பு கொள்கைகள் அரசியலுக்கு எல்லாம் அப்பாற் பட்டது. ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம். அப்படி இருந்த போதிலும் எனக்கு ஸ்டாலின் சார் அவரது தொகுதியில் தோத்தது மிகவும் கஷ்டமாக இருந்தது அதனால் ஒரு நண்பன் என்ற முறையில் தான் நான் அவரை போய் சந்தித்தேன்".

✅எனது பார்வை:

ரஜினி நேற்று அளித்த பேட்டி ஒரு அப்பட்டமான வாக்கு மூலம் என்றுதான் நான் கருதுகிறேன். ஆமாம் இதுவரை யூகங்களின் அடிப்படையில் நான் எனது முந்தைய பல பதிவுகளில் எழுதிய கருத்துக்கள் பல இப்போது நிஜம் என்று நிரூபணம் ஆகியுள்ளது.

இந்த நிழல் மனிதரின் நிஜ மனோபாவம் எப்படி எல்லாம் இவரை திசை மாற வைத்து விட்டது என்று அறிந்து கொள்ள இவரது கடந்த கால பின்னணியையும் நேற்று அவர் கொடுத்த பேட்டியையும் சற்றே ஒப்பிட்டு, தொகுத்து பார்ப்போம்.

✅திரைத்துறையில், ரஜினியின் முதலாளிகள் சார்ந்த "முன்னாள் முதல்" குடும்பத்தில் உள்ள ஒரு முக்கியமான நபர் ஸ்டாலின். அவர் கட்சி, குடும்பங்கள் ஆகிய இரண்டிலுமே ஓரளவு கருணாநிதியின் இடத்தில் இருப்பவர். முக்கியஸ்தர். அவரது தலைமையிலான திமுக தான் அரசியலில் ஆட்சி பீடத்தில் (2021-26) இருந்தது.

2021ல் ரஜினி அரசியலில் குதிக்கப்போவதாக தீவிர பேச்சுக்கள் நடந்து, அவரும் அதற்கான செயல்பாடுகள் பலவற்றில் ஆர்வம் காட்டி ராகவேந்திரா மேடையில் பலவாறு "சிஸ்டம் கெட்டு போச்சு" என அன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்து கூப்பாடு போட்டு முழங்கினார். ஏகப்பட்ட வீரதீரமான வசனங்களை பேசினார். டெபுடிகளை கூட நியமனம் செய்தார்.

மகா பெரிய அளவில் கூட்டமெல்லாம் போட்டு Dec 28, 2021 ல் வீர வசனம் பேசினார். குழப்பவாதி ரஜனி மீண்டும், மீண்டும் தனக்குள் யோசித்து பார்த்திருப்பார் போல இருக்கிறது. திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும். அதை விட, மேடையில் தான் பிரசாரம் செய்யும் போது 40 வருட நண்பர் ஸ்டாலின் மற்றும் அவரது அணியையும் திட்டித் தொலைக்க வேண்டும். இதெல்லாம் எப்படி தனக்கு சாத்தியம். எனவே தனது அரசியல் பிரவேசம் செய்யும் முடிவை re-visit செய்து, இறுதியாக Dec 30, 2021ம் தேதியன்று அவர் அண்ணாத்தே படத்தின் ஷூட்டிங் ல் இருந்தபோது, அங்கிருந்து வெளியேறி நேராக ஹைதராபாத் ல் ஒரு ஆஸ்பத்திரிக்கு போய் படுத்துக் கொண்டு உடல் நிலையை காரணமாக சொல்லி செமயாக பல்டி அடித்தார்.

✅அரசியல் களத்தில் போட்டியாளர்கள் ஆக இருப்பவர்கள் (2021 ல்) அதாவது அரசியல் ரீதியாக தான் எதிர்க்க வேண்டிய நபர்கள் திமுக நண்பர்கள் எனும்போது அவர்களை எதிர்த்து எப்படி அவர் கடுமையாக பேசுவார், அரசியல் செய்வார். ஆரம்பத்தில் டெல்லி தலைமை மற்றும் ஒரு பிரபலமான தமிழக 'குரு' வான ஆலோசகர் போன்றவர்கள் கொடுத்த
தூண்டுதலின் பேரில் தீவிர அரசியலுக்கு தான் வரப்போவதாக சொல்லிக் கொண்டு இருந்தார் ரஜினி. தூபம் போட்டு குளிர் காய்ந்தவர்கள் அர்ஜுன மூர்த்தி, மாரி தாஸ், தமிழருவி மணியன் பாண்டே, கோலாகலாஸ் போன்ற பல பிரபலங்கள். ஆனால் 40 வருட கால நண்பர் ஸ்டாலின் மற்றும் கருணாநிதி காலத்தில் இருந்தே பழகிய மற்றவர்கள் எல்லாம் திமுக நட்பு வட்டம் இப்படி பல விஷயங்கள் மனதில் வந்து உறுத்த உறுத்த அவரது அசட்டு துணிச்சல் கரைந்து போய் பயம் வந்தது. நமக்கு அரசியல் பதவியா அல்லது சினிமா வியாபாரம் மூலம் கிடைக்கும் லாபங்களா எதில் அதிக லாபம் என்று அவர் கணக்கு போட்டார். இந்த குழப்பத்தில் சினிமாவே லாபங்களே வென்றது. எனவேதான் தன்னுடைய அரசியல் பிரவேச கன்னி முயற்சியை உடல்நல குறைவு என்று காரணம் காட்டி Abrupt ஆக ABORT செய்து விட்டார். ஆக, தனது 40 வருட கால நண்பருக்காக அரசியல் வாய்ப்புகளை தியாகம் செய்து விட்டார்.

✅கடந்த ஐந்து வருட ஆட்சியில் தமிழகத்தின் உண்மையான நிலைமை எப்படி இருந்தது என்று இரண்டு வயது பெண் குழந்தைகள் முதல் 80 வயது முதிய பெண்கள் வரை நன்கு அறிவார்கள்.

*மது, கஞ்சா, மற்ற போதை பொருட்கள் மளிகை மாதிரி கிடைக்கும் மிகவும் ஆபத்தான நிலை.
*பெண்கள், குழந்தைகள் சார்ந்த கிரிமினல் குற்றங்கள் மலிந்து விட்ட கேடுகெட்ட நிலை.
*அதிக அளவில் கட்ட பஞ்சாயத்துகள் அதனை தொடர்ந்த வன்முறைகள் மற்றும் கொலைகள்.
* இந்து மதம் சார்ந்த பெரும்பான்மையான மக்களுக்கு வேண்டும் என்றே செய்யப்படும் அநீதிகள், தூண்டப்பட்ட தடைகள்.
*அறநிலைய துறையின் அறமற்ற செயல்பாடுகள்.
*மாநிலத்தில் எல்லா திட்டங்களிலும் கமிஷன் ஒன்றே குறிக்கோள் என்று செயல்படும் நிலை.
*சக்கரங்கள், கதவுகள், படிக்கட்டுகள் போன்றவை சாலையி லேயே கழன்று ஓடும் நிலையில் அரசு பேருந்துகள்.
*செயின் பறிப்புகள், வழிப்பறி கொள்ளைகள் மற்றும் தொடர் கொலைகள்.
*தற்கொலை களாக மாற்றப்படும் கொலைகள்.
*இன்றளவும் விடை தெரியாத மிகவும் பிரபல அண்ணா பல்கலையின் "யார் அந்த சார்".

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

இதுபோன்ற எந்த ஒரு கேவலமான நிகழ்வுக்கும் இந்த உச்ச பட்ச நடிகர் தனது வாயை சற்றேனும் திறக்கவில்லை. ஒரு சிறு எதிர்ப்பை கூட அவர் தெரிவிக்கவில்லை. ஆக, 40 வருட கால ஸ்டாலின் உடனான நட்பு அவரை ஆளும் அரசிற்கு எதிராக பேச விடாமல் தடுத்து வாய் பூட்டு போட்டு விட்டது.

✅அவரது முக்கியமான பட முதலாளிகள் சிலர் மது தயாரிப்பு ஆலைகளும் நடத்துபவர்கள். தனது பட ஆடியோ லான்ச் ஒன்றின் போது மது குடிப்பது கெடுதல் என்பது போன்ற மக்கள் நலம் சார்ந்த விஷயங்களை அதிகமாக பேசியிருந்தார். தனது ரசிகர்களை குடிக்காதீர்கள் என்று சொல்பவர், மது தயாரிப்பை கைவிடுங்கள் என்று அவரது நண்பர்கள்/ முதலாளிகளிடம் சொல்ல எப்படி தைரியம் வரும். அரசிடம் மது விலக்கை அமல்படுத்த சொல்லி எப்படி கேட்பார். ஒரு சிறு எதிர்ப்பை கூட அவர் தெரிவிக்கவில்லை. ஆக, 40 வருட கால ஸ்டாலின் உடனான நட்பு அவரை ஆளும் அரசிற்கு எதிராக பேச விடாமல் தடுத்து வாய் பூட்டு போட்டு விட்டது.

✅ஒரு முன்னாள் முதல்வரின் வீட்டிற்கே சென்று அவரின் அரசியல் தோல்விக்காக துக்கம் விசாரித்ததை வைத்து பார்த்தால் இவர் யாருக்கு வாக்களித்து இருப்பார் என்பது வெட்ட வெளிச்சம். அப்படியானால் கடந்த ஐந்து வருடங்களாக இங்கே நடந்த அராஜக நிகழ்வுகளுக்கு அப்ரூவல் தருகிறார் என்று தானே பொருள். ஆக, 40 வருட கால ஸ்டாலின் உடனான நட்பு அவரை ஆளும் அரசிற்கு எதிராக பேச விடாமல் தடுத்து வாய் பூட்டு போட்டு விட்டது.

✅"நான் அரசியலுக்கு வரவில்லையே என்று என்னுடைய ரசிகர்களுக்கு ஆதங்கம் இருக்கும் என்பது எனக்கு புரிகிறது. நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் நான் வெற்றி பெற்று இருப்பேன்" என்று ரஜினி இப்போது கூறுகிறார். சூழ்நிலை சாதகமாகவே இருந்தும் அந்த முயற்சியில் ஏன் இவர் பின்வாங்கினார். அப்படி என்றால் தனக்கு கிடைத்து இருக்கக்கூடிய அரிய ஒரு வாய்ப்பினை நண்பனுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டாரா? என்ன ஒரு தியாக மனப்பான்மை. ஆக, 40 வருட கால ஸ்டாலின் உடனான நட்பு அவரை அரசியலில் நுழைய விடாமல் தடுத்து விட்டது.

✅"நடிகர்கள் பின்னால் சென்று காயப்பட்டால் உங்களுக்கு தான் ஆபத்து. படிக்க வேண்டிய வயதில் படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும்" என்று தேர்தலுக்கு முன், ஏப்ரல் 8 ம் தேதி ரஜனி பேசினார்.

தமிழகத்தில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும் அவர் தன் திருவாய் திறக்காமல் பக்கா அமுக்குணி மன்னனாகவே இருந்தார். ஆனால் இங்கே புதிதாய் முளைத்த தவெக கட்சியின் போக்குகளை பார்த்து விட்டு, திமுக "மேலிடம்" கொடுத்த அன்பான கட்டளையை சிரமேற் கொண்டு ஏற்று, இளைஞர்கள் ஜோசஃப் விஜய் பக்கம் அதிக அளவில் திசை திரும்பி விடக்கூடாது என்ற பயத்தில், தான் மக்கள் மீது அக்கறை காட்டுவது போல நடித்து இந்த அளவு பேசியுள்ளார் என்றுதான் நாம் எண்ணிக் கொள்ள முடிகிறது. "இந்த எங்கள் கருத்து உண்மை தானே கோபால்". ஆம், நீண்ட கால நட்பு மனதில் ஏகமாய் பொங்கி வழிந்தோடிய காரணத்தாலேயே "நடிகர் பின்னால் செல்லாதீர்கள்" என்று தனது 40 வருட நண்பருக்காக இந்த இரு பொருள் பொதிந்த அறிவிப்பை புதிய இளம் வாக்காளர்கள் மத்தியில் உலவ விட்டு மறைமுக பிரசாரம் செய்து இருக்கிறார்.

✅நான் முன்பே எழுதியது போல இவர் உறுப்பினர் அட்டை இல்லாத ஒரு திமுக காரர்; முதுகெலும்பு இல்லாத சுயநலம் மிக்க ஒரு தேசிய வாதி.

தலையை ஒரு பக்கமும் வாலை ஒரு பக்கமும் காட்டும் கலையை நன்கு அறிந்த ஒரு முதிர்ந்த பச்சோந்தி. இந்த உச்ச நடிகரின் மறைமுகமான திட்டம் / உள்நோக்கம் இப்போது வெளிப்பட்டு விட்டது. பூனை வெளியே வந்து விட்டது. எனவே இவரை பற்றிய எனது மதிப்பீட்டில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை.

✅இவரை எல்லாம் தலைவா, தலைவா என்ற பெயரில் எப்படித்தான் பெரும்பாலான மக்கள் வெறித்தனமாக கூவி கொண்டாடி கூத்தடித்து வருகிறார்களோ நமக்கு எதுவுமே தெரியவில்லை. மக்கள் என்றைக்கு நடிகனை, நடிகனாக பார்க்க கற்றுக் கொள்ளகிறார்களோ அன்று தான் நமது தேசம் உருப்படும்.

மேலும் சிந்திப்போம்,
மீண்டும் சந்திப்போம்.

Bye for now👋

Bharat Mata ki Jai🙏
Thanks:: Sri k v sridhar

என்னதான் நடக்கிறது நம்மை சுற்றி?ஒரு மாபெரும் தேசிய கட்சி, பலமாநிலங்களை தனித்து வென்ற கட்சி, மத்தியில் ஊழலின்றி ஆட்சியில்...
18/05/2026

என்னதான் நடக்கிறது நம்மை சுற்றி?

ஒரு மாபெரும் தேசிய கட்சி, பலமாநிலங்களை தனித்து வென்ற கட்சி, மத்தியில் ஊழலின்றி ஆட்சியில் இருக்கும் கட்சி, உலக நாடுகளை திரும்பிபார்க்கவைக்கும் உன்னதம் படைத்த தலைவர்களை கொண்ட கட்சி தமிழகத்தில் திண்டாடுகிறது…. தன்னிலை மறந்து தத்தளிக்கிறது….

விஜய்யின் வெற்றி என்ன சொல்கிறது? அதிமுக அழிவின் அறிகுறி என்ன சொல்கிறது? இங்கே தனிமனிதனை நம்பிதான் ஆட்சி அமையும் என சொல்கிறது.

ஜெயலலிதா அவர்கள் இல்லாத அதிமுகவை ஏற்றுகொள்ள மக்கள் தயாராக இல்லை. அவரின் இடத்தை பூர்த்திசெய்யும் வசீகரமும் அறிவும் யாரிடமும் இல்லை. அதுபோல் விஜய் கட்சியில் நிற்பது நாயோ பேயோ மக்களுக்கு தேவையில்லை அவர் வசீகரம் மட்டுமே நம் மக்களுக்கு போதுமானது. இப்போது 3 வயதுநிறம்பாத குட்டிகுஞ்சுகள் 30 வயது ஆகும்வரை விஜய்யை விட்டு அகலப்போவதில்லை. பெண்களுக்கு ஆட்சியின் அழிவோ அக்கறையோ அவசியமில்லை அவர்களின் கனவு கண்ணன் கண்ணெதிரே தோன்றினால் போதும்…

எங்கேதான் போகிறது தமிழகம்?!

பாரதிய ஜனதா கட்சியில் விஜய்யை, ஜெயலலிதாவை எல்லாம் தன்னுள் அடக்கிய ஒருவன் தமிழகத்தில் இருக்கிறான்…

அழகன்…
அறிவானவன்…
அன்பன்…
அதிரடியானவன்…

அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதுபோலத்தான் இருக்கிறது சூழ்நிலை… இப்போது சாரை சாரையாக மாற்றுக்கட்சியினர் தாவேகாவை நோக்கி நகர்கின்றனர்… ஆம் மக்களுக்கு கொண்டாட ஒரு தலைவன் வேண்டும்… ஒரு ஈர்புமிக்க காந்தமாக அவன் இருத்தல் வேண்டும்…

என்றால், பாஜக தமிழகத்தில் கொள்கைகளை வைத்து வருவதற்கு முதல்படி மக்கள் மனதை கொள்ளைகொண்டவனை தலைவனாக்க வேண்டும்…

உயர்ந்த மலைக்கு முன்னால் உருண்டுவந்த பாறாங்கற்கள் என்னை பார் என்னை பார் என கண்ணை உருத்தி கதகளியாடுவதை என்னவென்று சொல்ல?

மோடிஜியின் ஈர்ப்பில் ஒருவன் வேண்டும். முழுக்க முழுக்க அறிவு செறிந்து கிடப்பவன் வேண்டும். பெண்களுக்கு மனதிலிருந்து அன்பும் மரியாதையும் செலுத்தும் ஒழுக்கமான ஒருவன் வேண்டும்.

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில்?!

சிவார்ப்பணம்!!!

18/05/2026

ஒரு விஷயம் புரியவே இல்லை.. கண்டிப்பாக நான் நடிகர் விஜய் ஆதரவாளர் இல்லை. சினிமாவில் அவர் நடித்த போது கூட அவரது படங்களை விரல் விட்டு எண்ணும் படங்களை மட்டுமே பார்த்து இருக்கிறேன். என்னுடைய தனிப்படட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கட்டும், அது ஒவ்வொருவருக்கும் இருக்க தான் போகிறது, நான் அதிர்ந்து போய் நிற்பது திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் இன்னும் கடைக்கோடி உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் நடந்து கொள்ளும் விதம் பற்றியது. அதிலும் குறிப்பாக தேர்தலில் தோல்வி அடைந்த முக ஸ்டாலின், வெற்றி அடைந்த அவரது குடும்ப வாரிசு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பேசி வரும் பேச்சுகள் தான்.

அதிலும் மாவட்டம் தோறும் தோல்விக்கான காரணங்கள் பற்றி ஆராய்ந்து வருவதாக கூட்டம் நடத்தி அதில் பங்கேற்கும் திமுக நபர்கள் இன்றைய முதல்வரையும் அவருக்கு ஓட்டு போட்ட மக்களையும் கடுமையான மொழியில் தொடர் விமர்சனம் செய்வது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது!

பத்து வருடம் ஆட்சியில் இல்லாமல், பின்னர் ஐந்தாண்டு ஆட்சியில் அமர்ந்தார்கள். அப்போதே தமிழ் அருவி மணியன் பேசினார், இவர்கள் அகோர பசியில் இருக்கிறார்கள், ஒரு வேளை ஜெயித்து வந்து விட்டால் தமிழ் நாட்டு கஜானாவை வழித்து துடைத்து விடுவார்கள் என்று.

அதே போல் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிற அண்ணாத்துரை வாக்கின்படி, ஜெயித்து, கோடிக்கணக்கில் எல்லா வகையிலும் இந்த ஐந்து ஆண்டுகளில் பணம் சம்பாதித்து விட்டு அந்த பணத்தை வைத்துக் கொண்டு மீண்டும் தேர்தல் வரும்போது மானாவாரியாக செலவு செய்து விட்டு, மீண்டும் நம் ஆட்சி தானே வர போகிறது , போட்ட பணத்தை இரட்டிப்பாக எடுத்து விடலாம் என்று நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு பத்து பைசா செலவழிக்காமல், தேர்தல் செலவு என்பது கிஞ்சித்தும் செலவழிக்காமல், பல மாவட்டங்கள், அங்குள்ள தொகுதிகள் என்று எங்கும் காலடியை கூட எடுத்து வைக்காமல், எந்த திக்கில் இந்த மாவட்டங்கள் இருக்கிறது என்று கூட தெரியாமல் போட்டியிட்டு, ஜெயித்து, நம்மை நடுரோட்டில் நிற்க வைத்து விட்டார்களே என்கிற ஜீரணிக்கவே முடியாத கோபம் ஆத்திரம் எல்லாம் கலந்து வன்மத்தில் கொண்டு போய் கொண்டு இருக்கிறது.

முரசொலி செய்தியை படித்தால் நான் சொல்வது புரிய வரும். நிலை குலைந்து போய் விட்டது திமுக..இந்த புது எதிரியை எப்படி கையாள்வது என்பதே இன்னும் இவர்களுக்கு புரியவில்லை..

நேற்று ஒரு தோல்வி பற்றிய ஆராய்வு கூட்டத்தில் கைகலப்பு வரை போய் இருக்கிறது..

எத்தனை பேர் சொத்தை எல்லாம் விற்று திமுக எம்எல்ஏ ஆக வேண்டும் என்று பணத்தை செலவழித்தார்களோ...

சே.. மக்கள் சேவை ஆற்றுவது என்பது எவ்வளவு பெரிய பொருளாதார சிக்கலில் கொண்டு போய் விடுகிறது!!!!

நடிகர் விஜய் தோற்று போனால் அவரது ரசிகர்கள் மனநிலை என்னவாகும் என்று கிண்டல் செய்து கொண்டு இருந்த நிலை மாறி, இப்போது திமுக நிர்வாகிகள் மன நிலை பற்றி கவலை படும் நேரம் வந்துவிட்டது என்பது தான் திராவிட அரசியலுக்குக்கு ஏற்பட்ட சிக்கல்.
நன்றி :: திரு T K L ஸ்ரீராம் avl

11/05/2026

நான் பொதுவாக WhatsApp செய்திகளை பகிர்வதில்லை.
ஆனால் இது நடுவண் அரசின் ஸீனியர் ஆஃபீஸர் ஒருவரின்
செய்தி.
அதில் இருக்கும் செய்திகள் சிந்திக்க வேண்டியவை.
அதனால் பகிர்கிறேன்.
நண்பர்களுக்கும் இந்த சந்தேகம் வரவேண்டும்,
உண்மை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற
நல்லெண்ணத்தினால் பகிர்கிறேன். விஜய் ஜோசப் ஒரு மீட்பரைப் (Saviour)போல உடையணிந்து வந்தார்.

ஆனால் அரசியல் மீட்பர்கள் அரிதாகவே சுயமாக உருவாகிறார்கள்.

சுவரொட்டிகள் அவரை ஏழைகளின் நாயகனாகக் காட்டி ன.

பணப் பாதை ஒரு இருண்ட கதையைச் சொல்கிறது.

சிலர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

சிலர் பதவியில் அமர்த்தப்படுகிறார்கள்.

26 மாதங்கள் மட்டுமே ஆன ஒரு கட்சி திடீரென்று ஒரு பிரம்மாண்டமான இயந்திரத்தை உருவாக்கியது.

234 இடங்கள். வென்றவை 108

70,000 வாக்குச்சாவடி முகவர்கள்.

டிஜிட்டல் போர்.

மாபெரும் பேரணிகள்.

அத்தனை தொகுதிகளிலும் முழுமையான coverage.

வாக்குச்சாவடி உள்கட்டமைப்பை உருவாக்க பாஜகவுக்குப் பல தசாப்தங்கள் ஆனது.

டிவிகே அதை சில மாதங்களில் செய்தது.

பருவமழை நீரைப் போலப் பணம் கொட்டியது.

டிவிகே பிரச்சாரத்தின் மதிப்பிடப்பட்ட செலவு?

~₹1,500 கோடி.

நன்கொடையாளர்களின் பட்டியல் அறிவிக்கப்படவில்லை.

வெளிப்படையான நிதி வரைபடம் இல்லை.

வெறும் விளம்பரங்கள்.

தன்னார்வலர்கள்.
கள வலைப்பின்னல்கள்.

எங்கும்.

எனவே, நான் இன்னும் ஆழமாகத் தோண்டினேன்.

விஜய்க்கு அருகில் ஒரே ஒரு முகம் மீண்டும் மீண்டும் தோன்றியது.

ஒவ்வொரு பேரணியிலும்.

ஒவ்வொரு காட்சியும்.

ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரப் பயணமும்.

ஆதவ் அர்ஜுனா.

டிவிகே-யின் பொதுச் செயலாளர்.

இரண்டாம் நிலைத் தலைவர்.

ஆதவ், சாண்டியாகோ மார்ட்டினின் மருமகன்.

இந்தியாவின் லாட்டரி மன்னன்.

அதே சாண்டியாகோ மார்ட்டின்.

தேர்தல் பத்திரங்களை வாங்கிய தனிப்பெரும் நபராக ஆனவர்.
₹1,368 கோடி.

அமலாக்கத்துறை வழக்குகள் தொடர்ந்தன.

பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்ந்தன.

சொத்துக்கள் முடக்கப்பட்டன.

சோதனைகள் நடந்தன.

இருந்தபோதிலும், அந்த வலைப்பின்னல் விரிவடைந்து கொண்டே இருந்தது.

ஒரே குடும்பம்.

பல கட்சிகளுக்குள்.

பல திசைகளிலிருந்து வெற்றி.

யார் ஆட்சி செய்தாலும்...
மார்ட்டின் குடும்பம் உள்ளே இருக்கிறது.

ஆனால் சாண்டியாகோ மார்ட்டின் ஒரு தொழிலதிபர் மட்டுமல்ல.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (போப்பாண்டவர்), மார்ட்டினுக்கும் அவரது குடும்பத்திற்கும் தனிப்பட்ட முறையில்,
ஒரு திருத்தூது ஆசீர்வாதத்தை வழங்கினார்.

இது கத்தோலிக்க வட்டாரங்களில் வழங்கப்படும் மிக உயர்ந்த அடையாள மரியாதைகளில் ஒன்று.

பின்னர் மற்றொரு அடுக்கு தோன்றியது.

மார்ட்டின் லைபீரியாவின் தூதராகவும் பணியாற்றினார்.

இராஜதந்திர அணுகல்.

இராஜதந்திர வழித்தடங்கள்.

இராஜதந்திரத் தனிமைப்படுத்தல்.

பிறகு நான் இன்னும் பின்னோக்கி நகர்ந்தேன்.

விஜய்யின் தந்தை.
எஸ். ஏ. சந்திரசேகர்.

ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர்.
தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர்.
பல நூற்றாண்டுகளாக மதபோதகர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு பகுதி.

பிறகு லயோலா வந்தது.

விஜய்யின் மாமா சேவியர் அல்போன்ஸ் லயோலா கல்லூரியை வழிநடத்தினார்.
ஒரு சக்திவாய்ந்த ஜேசுசபை நிறுவனம்.

மற்றொரு மாமா,
சேவியர் பிரிட்டோ,
விஜய்யின் ஆரம்பகாலப் படங்களைத் தயாரித்தார்.

TVK தொடங்கப்பட்ட பிறகு,
லயோலாவின் சர்வதேச முன்னாள் மாணவர் செயல்பாடுகள் உலகளவில் வெடித்தன.

நிதி திரட்டல்கள்.

நிகழ்வுகள்.
தொடர்புகளை வளர்த்தல்.

ஆனால் ஜேசுசபையினர் சாதாரண அமைப்புகளைப் போல செயல்படுவதில்லை.
அவர்கள் கண்டங்கள் கடந்து செயல்படுகிறார்கள்.
நிறுவனங்கள் கடந்து.
தலைமுறைகள் கடந்து.

பிறகு தேர்தல் வாரம் வந்தது.

கத்தோலிக்க ஆயர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.

தேவாலயங்கள் வழியாக.

ஞாயிறு திருப்பலியின் போது.

அதன் செய்தி தெளிவாக இருந்தது.

பாஜக-விற்கு எதிராக வியூகம் வகுத்து வாக்களியுங்கள்.

பின்னர், டிவிகே-வின் தேர்தல் வாக்குறுதி வந்தது.

தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீடு.

இப்போது அங்கே சற்று நிறுத்துங்கள்.

ஏனென்றால், இங்கேதான் சித்தாந்தமும் பொருளாதாரமும் சந்திக்கின்றன.

அரசு வேலைகள்.

கல்வி உதவித்தொகை.

இட ஒதுக்கீட்டுப் பலன்கள்.

மத அடையாளத்துடன் இணைக்கப்பட்டவை.

அது மதமாற்றச் சமன்பாட்டை நிரந்தரமாக மாற்றிவிடுகிறது.

மேலும் இது டெல்லிக்குத் தெரியும்.

இது உளவுத்துறைக்குத் தெரியும்.

இது ரா-விற்குத் தெரியும்.

யாராவது இதை வெளிப்படையாக எதிர்கொள்ள விரும்புகிறார்களா என்பதுதான் உண்மையான கேள்வி.

ஏனென்றால், தமிழ்நாடு என்பது மற்றுமொரு மாநிலம் மட்டுமல்ல.

அது எப்போதுமே கத்தோலிக்க மறைப்பணியாளர்களின் மையமாக இருந்தது.

இப்போது அங்கே ஒரு புதிய அதிகாரக் கட்டமைப்பு நிற்கிறது.

விளக்கப்படாத பணம்.

பன்னாட்டு லாட்டரி சாம்ராஜ்யம்.

தலைமுறை தலைமுறையாக சக்திவாய்ந்த ஜேசுசபையினரின் செல்வாக்கு.

இது வறுமையிலிருந்து செல்வந்தரான ஒரு அரசியல் கதை அல்ல.

இது அதைவிட மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஜோசப் விஜய் முதலமைச்சரானார்.

மக்கள் ஜனநாயகத்தைக் கொண்டாடினார்கள்.

ஆனால், உண்மையில் அவர்கள்தான் தேர்ந்தெடுத்தார்களா?

சான்டியாகோ மார்ட்டினைச் சந்தியுங்கள்.

லாட்டரி மன்னன்.

அரசியல் நன்கொடையாளர்.

ராஜதந்திரி.

மேலும், ஒருவேளை தென்னிந்திய அரசியலில் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்.

நிகர மதிப்பு?

₹6,000 கோடிக்கும் மேல்.

அதிகாரப்பூர்வக் கதை கேட்பதற்கு அழகாக இருக்கிறது.

ஒரு ஏழை குழந்தை தொழிலாளி.

மியான்மரிலிருந்து.

அவர் ஒன்றுமில்லாமல் கோயம்புத்தூருக்குத் திரும்புகிறார்.

சிறிய அளவில் தொடங்குகிறார்.

ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்.

இந்தியா இதுபோன்ற கதைகளை விரும்புகிறது.

ஆனால் யதார்த்தம் மிக வேகமாக நகர்ந்தது.

1987-ஆம் ஆண்டுக்குள்,
மார்ட்டின் ஏற்கனவே ஒரே நேரத்தில் ஐந்து லாட்டரி கடைகளை நடத்தி வந்தார்.

ஐந்து.

கஷ்டப்படும் ஒரு தேநீர்க் கடை கூட இல்லை.

ஒரு சாலையோரக் கவுண்டர் கூட இல்லை.

செயல்படும் ஐந்து லாட்டரி வணிகங்கள்.

ஒரு ஏழை புலம்பெயர்ந்தவர் சில ஆண்டுகளில் மன்னனாகிறார்.

கிட்டத்தட்ட ஒரு சினிமா காட்சி போல.

மூலதனம் எங்கிருந்து வந்தது என்று யாரும் கேட்கவில்லை.

பின்னர் சோதனைகள் நடந்தன.

வருமான வரித்துறை கிட்டத்தட்ட 70 இடங்களில் சோதனை நடத்தியது.

அமலாக்கத்துறை போலி நிறுவனங்களைக் கண்டுபிடித்தது.

பினாமி சொத்துக்கள்.

பொய்யான பொறுப்புகள்.

கணக்கில் காட்டப்படாத வருமானம்.

புள்ளிவிவரங்கள் அபத்தமாக மாறின.

₹595 கோடி கணக்கில் காட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

350 போலி நிறுவனங்கள்.

சந்தேகத்திற்கிடமான கட்டமைப்புகளின் கீழ் ₹3,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்.

தொடர்புடைய சட்டவிரோத நிறுவனங்களிலிருந்து ₹15,000 கோடி ஆண்டு வருவாய்.

பின்னர் ஒரு மரணம் நிகழ்ந்தது.

அவரது காசாளர் பழனிசாமி விசாரிக்கப்பட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் ஒரு குளத்தில் இறந்து கிடந்தார்.

அந்தச் செய்தி அமைதியாக மறைந்து போனது.

தமிழகம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.

மார்ட்டின் நகரவில்லை.

மாறாக, அவர் அனைவருக்கும் நிதியுதவி அளித்தார்.

திமுக அதிகபட்ச நிதியைப் பெற்றது.

திரிணாமுல் காங்கிரஸ்.

பாஜக.

ஒய்.எஸ்.ஆர்.சி.பி.

தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹1,368 கோடி.

இப்போது அங்கே சற்று நிறுத்துங்கள்.

ஏனென்றால், அவர் அறிவித்த ஆண்டு லாபம் சுமார் ₹49 கோடியாக இருந்தது.

ஆனாலும், அவர் அந்தத் தொகையை விடப் பல மடங்கு அதிகமாக அரசியல் ரீதியாக நன்கொடை அளித்துள்ளார்.

அப்படியானால், உண்மையான பணம் எங்கிருந்து வருகிறது?

மியான்மர் தோன்றுகிறது.

பூட்டான் தோன்றுகிறது.

நேபாளம் தோன்றுகிறது.

மார்ட்டின் மியான்மர்.
லாட்டரி ஏகபோகங்கள்.
எல்லை தாண்டிய கட்டமைப்புகள்.

பிறகு மற்றொரு அடுக்கு தோன்றுகிறது.

லைபீரியா.

மார்ட்டின் லைபீரியாவின் தூதராகப் பணியாற்றினார்.

அது வெறும் ஒரு பதவிப் பெயர் அல்ல.

அதன் பொருள் தூதரக அணுகல்.

தூதரகப் பாதுகாப்பு.

தூதரக வழித்தடங்கள்.

பிறகு வத்திக்கான் தோன்றுகிறது.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தனிப்பட்ட முறையில் ஒரு திருத்தூதர் ஆசீர்வாதத்தை (Apostolic Blessing) வழங்கினார்.

அது மார்ட்டினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது.

பெரும்பாலான கத்தோலிக்கர்கள் அதைப் பார்ப்பதே இல்லை.

பெரும்பாலான கத்தோலிக்கர்கள் போப்பை நெருக்கமாகப் பார்ப்பதே இல்லை.

மார்ட்டின், வத்திக்கானின் மிக உயர்ந்த அடையாள அங்கீகாரங்களில் ஒன்றைப் பெற்றார்.

பின்னர் அவரைச் சுற்றியிருந்த சூழல் அமைப்பு உருவானது.

அறக்கட்டளைகள்.
திருச்சபையுடன் இணைந்த வலையமைப்புகள்.
குடிமைச் சமூகத் தொடர்புகள்.
சர்வதேச ஒருங்கிணைப்பு.

இதற்கிடையில், தமிழ்நாட்டின் மதமாற்றத் தடைச் சட்டம் மறைந்து போனது.
அதே அரசியல் சூழல் அமைப்புக்கு பெருமளவு நிதி கிடைத்தது.
அதே சூழல் அமைப்பு மதமாற்ற நடவடிக்கைகளையும் ஆதரித்தது.

நீங்களே புள்ளிகளை இணைத்துப் பாருங்கள்.

இப்போது 2026-க்கு வருவோம்.

மார்ட்டினின் மனைவி அதிமுக மூலம் வெற்றி பெறுகிறார்.

அறிவிக்கப்பட்ட சொத்து மதிப்பு: ₹5,683 கோடி.

புதுச்சேரியில் என்டிஏ ஆதரவு அரசியல் மூலம் அவரது மகன் வெற்றி பெறுகிறார்.

அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா, திவ்க மூலம் உயர்கிறார்.

இப்போது ஜோசப் விஜயாவின் அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஒரே குடும்பம்.

மூன்று போட்டி முகாம்கள்.

அனைவரும் வெற்றி.

இது அரசியல் அதிர்ஷ்டம் அல்ல.

அதுதான் நிர்வாகக் குழுவின் கட்டுப்பாடு.

தமிழ்நாடு தலைவர்களைத் தேர்ந்தெடுத்ததாக நினைக்கிறது.

ஒருவேளை, நிர்வாகக் குழுவில் ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தவர்களை மட்டுமே அது தேர்ந்தெடுத்திருக்கலாம்.

மேலும், ஒருவேளை உண்மையான கேள்வி, சாண்டியாகோ மார்ட்டின் யாருக்கு நிதியளிக்கிறார் என்பதல்ல.

மாறாக, சாண்டியாகோ மார்ட்டின் இறுதியில் யாருக்குச் சேவை செய்கிறார் என்பதே. Thanks:: மிஸ் Kothai Nachiar

11/05/2026

இந்த பதிவை படித்தவுடன் மனசு உண்மையாகவே கனந்துபோய்விட்டது…

அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சாதாரண விஷயம் தான். ஆனால் சில தோல்விகள் வெறும் தேர்தல் முடிவாக மட்டும் தெரியாது…
அது ஒரு மனிதன் தனது வாழ்க்கையையே மக்களுக்காக அர்ப்பணித்தவர் கதை தெரியுமா???

பாஜக வேட்பாளர் வாசுதேவநல்லூர் ஆனந்தன் அய்யாசாமி அவர்கள் எழுதிய இந்த பதிவு அப்படிப்பட்ட ஒன்று.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் வெற்றிகரமான தொழில்நுட்ப வாழ்க்கை, நல்ல வருமானம், ரியல் எஸ்டேட் தொழில் என வசதியான வாழ்க்கையை வாழ்ந்த ஒருவர்…
அனைத்தையும் விட்டு இந்தியாவுக்கு திரும்ப முடிவு செய்கிறார். காரணம் — பொதுசேவை.

அந்த முடிவை தனது 12 வயது மகளிடம் பகிர்ந்தபோது, “பொது வாழ்க்கை” என்றால் என்ன என்பது அந்த குழந்தைக்கு புரியவில்லை.
ஆனால் அந்த முடிவு, அடுத்த சில ஆண்டுகளில் தனது அப்பாவை தன்னிடமிருந்து மெதுவாக பிரித்துவிடும் என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.

ஆனந்தன் அய்யாசாமி அவர்கள் உறுதியுடன் ஊருக்குத் திரும்பினார்.
அதன் பிறகு கடந்த 4 ஆண்டுகளாக, அவரால் முடிந்த அனைத்தையும் மக்களுக்காக அர்ப்பணித்துள்ளார்.

சுப்பிரமணியபுரம், வெள்ளனைக்கோட்டை போன்ற கிராமங்களில் வெயிலும் மழையிலும் பெண்கள் காத்திருக்க வேண்டாம் என்பதற்காக பேருந்து நிழற்குடைகள் அமைத்தார்.

100 ஏக்கர் குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
சீமைக்கருவேலங்களை அகற்றினார்.
கரைகளை பலப்படுத்தினார்.
ஆயிரக்கணக்கான பனை விதைகள் மற்றும் பனைக்கன்றுகளை நட்டார்.

மாணவர்களின் கல்விக்காக உதவினார்.
மருத்துவ முகாம்கள் நடத்தினார்.
இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தார்.
சமூக கூடங்கள் அமைத்தார்.
விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவித்தார்.
அன்னதானங்களுக்கும் பங்களித்தார்.

இந்த ஒரு கிராமத்திற்கே, அவர் உழைத்து சம்பாதித்த பணத்தில் இருபது லட்ச ரூபாய்க்கும் மேல் செலவழித்ததாக குறிப்பிடுகிறார்.

ஆனால் பணத்தைவிட அவர் இழந்தது மிகவும் பெரியது…

குடும்பத்துடன் கழிக்க வேண்டிய நேரங்கள்…
மகளின் சிறு வயது தருணங்கள்…
தொலைவில் இருந்து தான் வளர்வதை பார்த்துக்கொண்டிருந்த ஆண்டுகள்…

இவ்வளவு ஆண்டுகள் நேர்மையாக சேவை செய்த பிறகு தேர்தல் வந்தது.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைகூட மக்களை பார்க்க வராத வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இறுதியில், தேர்தல் வாரத்தில் கொடுக்கப்பட்ட பணம், நான்கு ஆண்டுகள் செய்த நேர்மையான உழைப்பையும் சேவையையும் தோற்கடித்துவிட்டது என்ற வேதனை இந்த பதிவின் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது.

அதில் மிகவும் மனதை உடைத்த வரி…

“அப்பா… இப்போதாவது அரசியல் என்றால் என்ன என்று சொல்ல முடியுமா?”
என்று வீடியோ கால் முடிவில் அவரது மகள் கேட்ட கேள்வி.

அதற்கு தனது வாழ்க்கையில் முதல் முறையாக பதில் இல்லை என்று அவர் எழுதியிருப்பது நெஞ்சையே உருக்கிவிடுகிறது… 😢

உண்மையாகவே, போராடி தோற்றார் என்று சொல்லலாம்…
ஆனால் மக்களுக்காக மனசார உழைத்தவர்கள், நேர்மையாக சேவை செய்தவர்கள் வரலாற்றில் ஒருபோதும் தோற்க மாட்டார்கள். 🙏

வாசுதேவநல்லூர் தொகுதியில் அவர் பெற்ற வாக்குகளே அதற்கு சாட்சி.
திமுக வேட்பாளர் E. ராஜா 63,045 வாக்குகள் பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமி அவர்கள் 56,462 வாக்குகள் பெற்றுள்ளார்.
வெறும் 6,583 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வி.

ஒரு கட்சியின் பெயரால் மட்டும் அல்ல…
நான்கு ஆண்டுகள் செய்த களப்பணியால், மக்களுடன் இருந்த உறவால், நேர்மையான முயற்சியால் தான் இந்த அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 🙏
Venkatesan Bjp

Address

Ealumalai Salai Street
Chennai
600129

Opening Hours

Monday 7:30am - 10:30am
5pm - 8pm
Tuesday 6am - 10:30am
5pm - 8pm
Wednesday 6am - 10:30am
5pm - 8pm
Thursday 6am - 10:30am
5pm - 8pm
Friday 6am - 10:30am
5pm - 8pm
Saturday 6am - 10:30am
5pm - 8pm
Sunday 10:30am - 5pm
5pm - 8pm

Telephone

+914435637940

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chakrarajan07 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category