27/04/2026
1976ல் பயன்ற சிதம்பரம் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.
சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள தவத்திரு ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளியில் 1976ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள தவத்திரு ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளியில் 1976-ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பள்ளி செயலாளர் டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சீனி.மோகன் முன்னிலை வகித்தார். வ.சிவக்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மூத்த நிர்வாகி மூதா, வழக்குரைஞர் பாலசுப்பிரமணியன், காந்திமன்ற தலைவர் மு.ஞானம், முன்னாள் மாணவர்கள் பு. செந்தமிழ்ச்செல்வன், பொறியாளர். இரா. இராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர்.
விழாவில் முன்னதாக சுமார் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று தங்களது பள்ளி கால நிகழ்வுகளையும், தற்போதைய நிலை குறித்தும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் பள்ளி முன்னாள் மாணவர்கள் பங்களிப்பு அமைக்கப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகம் திறக்கப்பட்டது. மாணவர்கள் பயன்பாட்டிற்கு புதிய கணினி இயந்திரங்கள் வழங்கப்பட்டது. மேலும் மாணவியர்களுக்கா கழப்பறை கட்டுமானத்திற்கான பூமிபூஜையும் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் ரா. சிற்றம்பலம், ந.கிருஷ்ணன், ந.சீனிவாசன், க.ராஜாராம் ஆகியோர் ஓருங்கிணைத்து நடத்தினர். நிகழ்ச்சியை தமிழாசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார், நிறைவில் கெளரி ராமநாதன் நன்றி கூறினார்.