23/02/2026
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமன வளாக நேர்காணல் – 58 மாணவர்கள் தேர்வு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் இயக்குநரகம் சார்பில், ராணிபேட்டை பாரதிதாசனர் கல்விக்குழுமம் மற்றும் காட்டுமன்னார்கோயில் GK கல்விக்குழுமம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமனத்திற்கான வளாக நேர்காணல் கடந்த 17.02.2026 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் முனைவர் S.அறிவுடைநம்பி மற்றும் பதிவாளர் முனைவர் R.சிங்காரவேல் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இந்த நேர்காணலில் சுமார் 240 மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு கட்டத் தேர்வுகள், திறன் மதிப்பீடுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றதையடுத்து கல்வியியல், உளவியல், நுண்ணுயிரியல், வேதியியல், தாவரவியல் மற்றும் உடற்கல்வியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த 58 மாணவர்கள் ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் முனைவர் S.அறிவுடைநம்பி மற்றும் பல்கலைக்கழக இணைப் பதிவாளர் திரு P.ஜெகதீஸ்வரன் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் புல முதல்வர்கள் முனைவர் S.ஸ்ரீராம், முனைவர் V.அம்பேத்கர், பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் இயக்குநரகத்தின் இயக்குநர் முனைவர் S.பிரகதீஸ்வரன், துறைத் தலைவர்கள் முனைவர் K.கிருஷ்ணசாமி, முனைவர் L.முல்லைநாதன், முனைவர் N.வெங்கடேசன், இணை இயக்குநர் முனைவர் K.சிவசுப்ரமணி, பயிற்சி வேலைவாய்ப்பு அலுவலர்கள் முனைவர் R.நீலகண்டன், முனைவர் P.K.செந்தில்குமார், பயிற்சி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் S.அனிதா சாந்தி மற்றும் முனைவர் S.கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த வளாக நேர்காணல் மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பது பல்கலைக்கழக மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.