19/02/2015
திருமணம் மற்றும் அனைத்து நிகழ்விழும் முதலில் வந்து கடைசியில் செல்கிறவன்....
அந்த நிகழ்வின் ஆதாரமானவன்...சாட்சியுமானவன்...
காலங்கள் கடந்த பின்னும் காட்சிகளை கண்முன்னே நிறுத்தி பசுமையான நினைவலைகளை மென்மையாக படர செய்வான்....
இளமை நினைவுகளை முதுமை வரை மட்டுமல்ல தலைமுறை தாண்டியும் கண்முன்னே நிறுத்துவான்,,,
அரசியல் தலைவர்களை அகிலம் காண ச்செய்வான்..
தீவிரவாதிகளின் முக வரியை காட்சி படுத்துவான்...
அசாதாரண சம்பவங்களின் சாட்சியாய் சர்வதேச மன்றத்தில் கூட நிற்பான்...
பசி மறப்பான், துயிலுறங்கான் ....
அவனது சேவை பத்திரிக்கை துறை,காவல் துறை, நீதி துறை,கல்வி துறை என ஓட்டுமொத்த அரசாங்கத்திற்கும் தேவை...
இவ்வளவு என்?..."excuse me "என்ற ஒரு வார்த்தையில் நாட்டின் தலைமகனையே ஒரு நிமிடம் நிற்க வைக்கும் சக்தி படைத்தவன்..
அவன்தான் எங்கள் புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞன்....