kannan photography

kannan photography karupaiyurani, madurai
625020

சித்திரை திருவிழா 2026  அழகர் மலையான் மதுரைக்கு தங்கச்சியின் மீனாட்சியின்  கல்யாணத்தைக் காண  கிளம்பிட்டாரு......     அழக...
30/04/2026

சித்திரை திருவிழா 2026

அழகர் மலையான் மதுரைக்கு தங்கச்சியின் மீனாட்சியின் கல்யாணத்தைக் காண கிளம்பிட்டாரு......

அழகர் கோவில்

🔥உலகப்புகழ்பெற்ற😍மதுரை சித்திரை திருவிழா 2026 (எட்டாம்  நாள்) அன்னை மீனாட்சி பட்டாபிஷேகம் வெள்ளி சிம்மாசனம் (கைபாரம்) வீ...
27/04/2026

🔥உலகப்புகழ்பெற்ற😍மதுரை சித்திரை திருவிழா 2026 (எட்டாம் நாள்) அன்னை மீனாட்சி பட்டாபிஷேகம் வெள்ளி சிம்மாசனம் (கைபாரம்) வீதி உலா...

(திருவிழாத் தத்துவமும் பலனும்)

எட்டாம் நாள் திருவிழாவில், இரவு, அருள்மிகு மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் நடைபெறும்.

அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு, அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் இரத்தின ஆபரணங்கள் இழைத்த இராயர் கிரீடம் சாற்றி, இரத்தினங்கள் இழைத்த செங்கோல் வழங்கி, ஆராதனைகளுடன்

பட்டாபிஷேகம் நடைபெறும். அருள்மிகு மீனாட்சியம்மன் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்பது என்பது ஐதீகம். சித்திரை முதல் ஆவணி வரை நான்கு

மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். எட்டாம் நாள் உற்சவம் தன்வயத்தன் ஆதல் முதலிய கடவுட் குணங்கள் எட்டினையும் விளக்குதற்

குறிப்புடையதாகும்.







kannan photography

🔥உலகப்புகழ்பெற்ற😍மதுரை சித்திரை திருவிழா 2026 (ஏழாம்  நாள்) நந்திகேசுவரர்,யாளி வாகனம் வீதி உலா...(திருவிழாத் தத்துவமும் ...
27/04/2026

🔥உலகப்புகழ்பெற்ற😍மதுரை சித்திரை திருவிழா 2026 (ஏழாம் நாள்) நந்திகேசுவரர்,யாளி வாகனம் வீதி உலா...

(திருவிழாத் தத்துவமும் பலனும்)

ஏழாம் நாள் திருவிழா, எழுவகைப் பிறப்பு, கலையாதிகள் ஏழு, மாயாகுணம் ஏழு, என்னும் இவற்றைத் தவிர்த்தற் பொருட்டாகும். ஏழாம் நாள்

காலையில் பிட்சாடனத் திருக்கோலத் திருவிழா நடைபெறும். தாருகாவனத்து ரிஷிகளும், ரிஷிபத்தினிகளும் ஆணவ மலத்தால் தாங்கள் சுதந்திரர்களென

எண்ணிக் கடவுளை மறந்தனர். அவர்கள் பரதந்திரர்களென உணர்த்துதற் பொருட்டு இறைவன் பிட்சாடன மூர்த்தியாய்ச் செல்ல, ரிஷிபத்தினிகள் அவரழகில்

ஈடுபட்டனர். விஷ்ணு மோகினியாகச் செல்ல அவ்வழகில் ரிஷிகள் ஈடுபட்டனர். இவ்விரண்டு செயல்களாலும் ரிஷிகளும், அவர் பத்தினிமார்களும்

பரதந்திரர்களேயென அவர்களை உணரச் செய்து, பரமன் மறைந்தருளினான். பராக்ரமக் கோலமே பிட்சாடனக் கோலமாகும். ஏழாம் நாள் இரவில்

அதிகாரநந்தி வாகனம், இது விருத்திக்கிரம சங்காரக் கோலம் என்பர். அதிகார நந்தி மான், மழு, சதுர்ப்புஜம், முக்கண் முதலிய குறிகளோடு சாரூப்பிய

பதவியைப் பெற்றவர். இவர் விஞ்ஞான கலர் எனும் ஆன்மாக்களுள் சிறந்தவர் ஆவர், கயிலையில் சிவசந்நிதானத்தில் அதிகாரம் செலுத்துபவர். ஆதலால்

அதிகாரநந்தி எனப் பெயர் பெற்றார்.







kannan photography

🔥உலகப்புகழ்பெற்ற😍மதுரை சித்திரை திருவிழா 2026 (ஆறாம் நாள்) ரிஷப வாகனம் - சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலை வீதி உலா...(திருவி...
25/04/2026

🔥உலகப்புகழ்பெற்ற😍மதுரை சித்திரை திருவிழா 2026 (ஆறாம் நாள்) ரிஷப வாகனம் - சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலை வீதி உலா...

(திருவிழாத் தத்துவமும் பலனும்)

ஆறாம் நாள் திருவிழா, காமாதி ஆறும், கலையாதி ஆறும், பதமுத்தி ஆறும், வினைக்குணம் ஆகியனவற்றை ஒழித்தற் பொருட்டு நிகழ்வதாகும். ஆறாம் நாள் இரவு, விருஷபவாகன சேவை மிகவும் முக்கியமானது.

அடியார்களுக்கு அருள்புரிய ஆண்டவன், விருஷபவாகனத்தில் எழுந்தருளி வருவதைப் புராணாதிகளால் நன்கு அறியலாம். அருள்பெற்ற ஆன்மா விருஷபமாகும். அதன் வெள்ளைநிறம், அதனிடத்து எவ்வித

மாசும் இல்லை என்பதை உணர்த்தும். தர்மம் என்ற அறத்தையே நான்கு கால்களாக் கொண்டுள்ளது. சமம், விசாரம், சந்தோஷம், சாதுங்கம் என்ற

நான்கு அறங்களும் நான்கு கால்களாய் அமைந்துள்ளன. மாசற்ற அறவடிவமான ஆன்மாக்களிடத்து, இறைவன் வந்து அமர்வான் என்பதை இது

குறிக்கின்றது. இது அனுக்கிரகக் கோலம்,







kannan photography

🔥உலகப்புகழ்பெற்ற😍மதுரை சித்திரை திருவிழா 2026 (ஐந்தாம் நாள்) தங்கக்குதிரை வாகனம் வேடர்பறிலீலை வீதி உலா...(திருவிழாத் தத்...
24/04/2026

🔥உலகப்புகழ்பெற்ற😍மதுரை சித்திரை திருவிழா 2026 (ஐந்தாம் நாள்) தங்கக்குதிரை வாகனம் வேடர்பறிலீலை வீதி உலா...

(திருவிழாத் தத்துவமும் பலனும்)

ஐந்தாம் நாள் திருவிழா, புலன்களின் வழியே செல்லும் ஐம்பொறிகளும், பஞ்ச அவத்தைகளும், பஞ்ச மலங்களும் தம்வலிகுன்றலைக் குறிப்பதாகும்.

ஐந்தாம் நாள் இரவு, அசுவ (குதிரை) வாகன ஆரோகணம். இது ஸம்ஹாரக் கோலமாகும். தர்ம, அர்த்த, காம, மோட்சங்களாகிய (அறம், பொருள், இன்பம், வீடு)

நான்கு கால்களையும், கிரியை, ஞானம் எனும் இரண்டு காதுகளையும், பரஞானம், அபரஞானம் எனும் இரண்டு கண்களையும், விதியாகிய முகத்தையும், நிடேதமாகிய வாலையும், ஆகமங்கள் என்கிற

ஆபரணங்களையும், மந்திரங்கள் எனும் பாதஸரத்தையும், கடிவாளம் எனும் பிரணவத்தையும், அண்ட கோடிகளாகிய முதுகையும், உபநிடதங்களாகிய சேணத்தையும் கொண்ட வேதக்குதிரையில்

இறைவன் சவாரி செய்கிறான் என்பதனையும் இது உணர்த்துகிறது.







kannan photography

🔥உலகப்புகழ்பெற்ற😍மதுரை சித்திரை திருவிழா 2026 (நான்காம்  நாள்) தங்கப்பல்லக்கு வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி வீதி உலா....
22/04/2026

🔥உலகப்புகழ்பெற்ற😍மதுரை சித்திரை திருவிழா 2026 (நான்காம் நாள்) தங்கப்பல்லக்கு வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி வீதி உலா...

(திருவிழாத் தத்துவமும் பலனும்)

நான்காம் நாள் திருவிழா, நாற்கரணம், நால்வகைத் தோற்றம் என்னும் இவற்றை நீக்குதற் பொருட்டு நிகழ்வதாகும்.







kannan photography

🔥உலகப்புகழ்பெற்ற😍மதுரை சித்திரை திருவிழா 2026 (மூன்றாம் நாள்) கைலாசவாகனம்,காமதேனு வாகனம் வீதிஉலா...(திருவிழாத் தத்துவமும...
22/04/2026

🔥உலகப்புகழ்பெற்ற😍மதுரை சித்திரை திருவிழா 2026 (மூன்றாம் நாள்) கைலாசவாகனம்,காமதேனு வாகனம் வீதிஉலா...

(திருவிழாத் தத்துவமும் பலனும்)

மூன்றாம் நாள் திருவிழா, மூவினையும், முப்புத்தியும், முக்குணமும், மும்மலமும், முப்பிறப்பும், முக்குற்றமும், முப்பற்றும் ஆனவற்றை

ஒழித்தற் பொருட்டாகும். மூன்றாம் நாள் இரவு, இராவணனது உடம்பின் மேலுள்ள கைலாச பர்வதத்தில் இறைவன் எழுந்தருளுகிறான்.

இவ்வாகனம், கைலாச பர்வதவாகனம் எனக் கூறப்படும். இராவணன், ஆணவ மலம் முதிர்ந்த ஜீவாத்மா. அகங்காரத்தால் எதுவும் செய்யக்

கூசாதவன். அவன் தனது திமிரால் கைலாச பர்வதத்தைத் தூக்கி எடுக்க, சிவபெருமான் கால்விரலை ஊன்ற, அவன் அலறிக் கை நரம்பால் வீணை

உண்டாக்கி சாமகானம் பாடினான். இறைவன் மகிழ்ந்து அவனுக்கு அருள்புரிந்தார். இது ஸ்திதி அல்லது காப்பாற்றுதலைக் குறிக்கும். இதிலிருந்து

இறைவனுக்குத் தீங்கு செய்தவர்களும், அடங்கி நின்று வழிபடுவாராயின், அவர்தமக்கும் இறைவன் அருள்புரிவான் என்பதும், இறைவனது

பெருந்தகைமையும் நன்கு விளங்கும்.







kannan photography

சித்திரை திருவிழா 2026 - இரண்டாம் நாள்(பூத வாகனம், அன்ன வாகனம்)Madurai, Tamil Nadu, 20.04.2026.  photography     of.indi...
21/04/2026

சித்திரை திருவிழா 2026 - இரண்டாம் நாள்
(பூத வாகனம், அன்ன வாகனம்)
Madurai, Tamil Nadu, 20.04.2026. photography


of.india minimalism

உலகப்புகழ்பெற்ற😍மதுரை சித்திரை திருவிழா 2026 (முதல் நாள்) கற்பக விருட்சம்,சிம்மவாகனம் வீதி உலா...(திருவிழாத் தத்துவமும் ...
20/04/2026

உலகப்புகழ்பெற்ற😍மதுரை சித்திரை திருவிழா 2026 (முதல் நாள்) கற்பக விருட்சம்,சிம்மவாகனம் வீதி உலா...

(திருவிழாத் தத்துவமும் பலனும்)

கொடியேற்றப்படும் கொடிப்பட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள ரிஷபம், தர்ம உருவாகவும், ஆத்மாவின் உருவாகவும் மதிக்கப்படுகிறது.

ஆத்மாக்களையும், தர்மத்தையும் கீழ்நிலையில் இருந்து உயர்நிலைக்கு கொண்டு செல்லும் இறைவனின் கருணை இக்கொடியேற்றத்

திருவிழாவில் விளக்கப்படுகிறது. பொதுவகையில் உயிர்களுக்கு அருள்புரியும் இறைவன், சிறப்பு வகையில் அருள்புரிய ஆயத்தமாக

இப்பன்னிரண்டு நாட்களும் காத்திருக்கிறான் என்பதை இக்கொடியேற்றம் உணர்த்துகிறது.

முதல் நாள் திருவிழா, தூல தேகத்தை நீக்கிக் கொள்ளும் பயனை விளக்குவதாக அமையும். முதல் நாள் இரவு, சிவபெருமான் மரத்தடியி

வீற்றிருப்பதை விளக்கும் கற்பக விருட்ச வாகனம் எழுந்தருளும், இதை விருத்திக்கிரம சிருட்டிக் கோலம் என்பர். மரத்தின் கிளைகளு

இலைகளும் தத்துவங்களும், உயிர்வர்க்கங்களாகவும் உள்ளன. இவற்றின் அடியில் இறைவன் இருந்து, சிருட்டிக்கெல்லாம் வேர்போல்

இருந்தருளுவதை இது உணர்த்துகின்றது....

photography

சித்திரை திருவிழா 2025 – பக்தியின் பெருவெள்ளம்🔥மதுரையின் மகத்தான மரபு சித்திரைத் திருவிழா! அழகர் பெருமாள் ராமராயர் மண்டக...
13/05/2025

சித்திரை திருவிழா 2025 – பக்தியின் பெருவெள்ளம்🔥

மதுரையின் மகத்தான மரபு சித்திரைத் திருவிழா! அழகர் பெருமாள் ராமராயர் மண்டகப்படி எழுந்தருளும் அந்த பரம அழகான தரிசனம், பக்தி, கலாசாரம், ஆனந்தம் எல்லாம் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் பாக்கியம்!




kannan photography
Kalai Photography

Address

Karupaiyurani , Othapatti
Madurai

Telephone

+919659463663

Website

Alerts

Be the first to know and let us send you an email when kannan photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to kannan photography:

Share

Category