04/08/2017
நகர்வலம் வெளிநாட்டில் செல்லும் முதல்வரே உன் நாட்டில் வலம் வந்து கண்டதுண்டோ காட்சிகளை!!
கங்கை தீர்த்தம் சுத்தம் செய்ய நிதி!
இங்கே குடிக்க நீரின்றி அலைகிறான் குடி!!
பட்டேலுக்கும், சிவாஜிக்கும் சிலை வைக்க கோடியில் நிதி!
பயிர் செய்ய முடியாமல் தவிக்கும் உழவனுக்கு சிலை வைக்க கோடியில் தான் இடம் தேட வேண்டும்!!
56 இன்ச் மார்பு காட்டி பேசும் மனிதா மார்பறுத்து இச்சை தேடிய மனிதனை தெரியுமா உனக்கு!!
சென்செஸ் பேசினாய் நீ!
s*x தொல்லையால் உயிரிழந்த கதை பேசமறந்தாய்!
மாட்டிறைச்சி தடை பேசினாய் நீ!
ஒவ்வொரு ஏழையையும் இறைச்சியாய் பார்த்த அவலம் தெரியுமா உனக்கு!!
ஹிந்தி கல்வி பேசினாய் நீ!
தாய்மொழி கல்வியே விலை என்ன என்று கேட்ட கதை தெரியுமா உனக்கு!!
டிஜிட்டல் இந்தியா மேடைதோறும் பேசினாய் நீ!!
அதன் அர்த்தம் தெரியாமல் பாதி பேர் வாழும் நாடு தெரியுமா உனக்கு!!
udai மின் திட்டம் பேசினாய் நீ!
மின்சாரம் அறியாத மக்களும் உண்டு இந்நாட்டில் தெரியுமா உனக்கு!!
சிறந்த மருத்துவம் வேண்டி neet பேசினாய் நீ!
இருக்கின்ற மருத்துவம் ஏழைக்கு பயன்படவில்லை தெரியுமா உனக்கு!!
ஒருவருக்கு ஒரு வீடு நிச்சயம் பேசினாய் நீ!
அரசியல் வாதிக்கு படுக்கை பகிர்ந்தவர்க்கு பல வீடுகள் உள்ளன தெரியுமா உனக்கு!!
லஞ்சம் தவிர்க்க யோசனைகள் சொன்னாய் நீ!
அதை மக்களுக்கு சொல்லவே லஞ்சம் வாங்கிய கதை தெரியுமா உனக்கு!!
உழைப்பாளிகள் உயர வேண்டும் என கூறினாய் நீ!
அதை உன்னருகில் இருந்த முதலாளிக்கு என்றெண்ணி அவன் கொழுத்த கதை தெரியுமா உனக்கு!!
கையில் தேனெடுத்து காட்டி உங்களுக்கு என கூறி அதை corprateகு ஊற்றி கொடுகிறாய்!!! வாழ்க உன் நகர்வலம் இல்லை இல்லை வெளிநாடு வலம்!!வளம்!!
ஏழைகள், பெண்கள்,இளம் தளிர்கள் செத்து விழட்டும் அதை பற்ற வைத்து உன் இனம் குளிர் காயட்டும்!! வாழ்க பாரதம்!!!~~முருகு