17/01/2026
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விருதுநகர் வடக்கு மாவட்டம் சார்பில் மதிப்பிற்குரிய மஹல்லா ஜமாத் நிர்வாகிகள், கண்ணியமிகு ஜமாத்தில் உலமா
பெருமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி விருதுநகர் கோட்டைப்பட்டி சின்னப்பள்ளி வாசல் வளாகத்தில் நடைபெற்றது,
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு வக்ஃப் வாரிய தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைத் தலைவர் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்
இந்நிகழ்வில் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் வைத்தனர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விருதுநகர் வடக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.இப்ராஹிம்ஷா வரவேற்றார்.
விருதுநகர் மாவட்ட ஜமாதுல் உலமா சபை செயலாளர் மௌலவி அப்துல் கரீம் பாகவி கருத்துரையாற்றினார்
திருச்சுழி தொகுதி செயலாளர் எஸ்.சாகுல்அமீது, அருப்புக்கோட்டை தொகுதி செயலாளர் முகமது சம்சுதீன், சிவகாசி தொகுதி செயலாளர் எம்.டி.சாகுல் ஹமீது,சிவகாசி தொகுதி துணை செயலாளர் முஹம்மது உசேன், மாவட்ட எம்.எஸ்.எப். அமைப்பாளர் மௌலவி அப்துல் அஜீஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் இக்பால் மைதீன், எஸ்.டி.யூ.மாவட்ட தலைவர் அமீன், எஸ்.டி.யூ.மாவட்ட பொருளாளர் முகமது ரபிக், விருதுநகர் பிரைமரி தலைவர் ஹாஜி நூருல் அமீன்,
விருதுநகர் துணைத் தலைவர் சிக்கந்தர், துணைச் செயலாளர் அபுரார், இளைஞர் அணி பொறுப்பாளர் சாபித், திருச்சுழி தொகுதி இளைஞரணி அமைப்பாளர் ஷேக் முஹம்மது, புதுப்பட்டி பிரைமரி தலைவர் இப்ராஹிம்ஷா, ஆவுடையாபுரம் பிரைமரி தலைவர் முபாரக், உள்ளிட்ட முஸ்லீம் லீக் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும்
மஹல்லா ஜமாத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள் பங்கேற்றனர்
விருதுநகர் வடக்கு மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் எஸ். ஏ.சர்தார் நன்றி கூறினார்..