Aathi adiyavan

Aathi adiyavan அன்பு என்பது
ஒரு சிறந்த பரிசு
அதை பெற?

Permanently closed.
மூலவினை தீர்க்கும் வைத்தியன் சேவகன் கண்டாய்மூவாமூர்த்தி முதுகயிலை மலையான் தொண்டன் கண்டாய்பால்தயிர்சேர் ஆவைந்தும் மகிழ்ந்...
09/12/2021

மூலவினை தீர்க்கும் வைத்தியன் சேவகன் கண்டாய்
மூவாமூர்த்தி முதுகயிலை மலையான் தொண்டன் கண்டாய்
பால்தயிர்சேர் ஆவைந்தும் மகிழ்ந்து ஆட்டுவித்தான் கண்டாய்
பன்னாள் ஆலின்கீழறம் உரைத்தானின் மாணவன் கண்டாய்

மாலிற்கு சுடராழி வீழியில் அளித்த நாதனின் நம்பன் கண்டாய்
மற்றோர் பற்றிலா அன்பர்தம் அன்பன் கண்டாய்
நல்லானை நெடுங்களம் நீங்காத சுந்தரன் கண்டாய்
நாவிரைக்க அவன்நாமம் உரைத்து அடியேன் உய்ந்தேன் கண்டாய்
---------- --------- ---------
எம்பிரான் அப்பர் சுவாமிகள் நினைக்க முக்தியருளும் திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள மலைமேல் செலுஞ்சுடரை தரிசித்து பண்ணார் பதிகத் தமிழ்பாடிப் பணிந்து பரவிப் பணிசெய்தது சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரியபுராணம் வாயிலாக..

நாதர் மருவுந் திருமலைகள்
நாடும் பதிகள் பலமிகவும்
காதல் கூரச் சென்றிறைஞ்சிக்
கலந்த இசைவண் டமிழ்பாடி
மாதொர் பாகர் அருளாலே
வடபால் நோக்கி வாகீசர்
ஆதி தேவர் அமர்ந்ததிரு
வண்ணா மலையை நண்ணினார்.
- திருநாவுக்கரசர் புராணம் - 311.

செங்கண் விடையார் திருவண்ணா
மலையைத் தொழுது வலங்கொண்டு
துங்க வரையின் மிசையேறித்
தொண்டர் தொழும்புக் கெதிர்நிற்கும்
அங்கன் அரசைப் பணிந்தெழுந்து
திளைத்துத் திருநா வுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு
மேலாம் பெருமை சாதித்தார்.
- திருநாவுக்கரசர் புராணம் - 312.

அண்ணா மலைமேல் அணிமலையை
ஆரா அன்பின் அடியவர்தங்
கண்ணார் அமுதை விண்ணோரைக்
காக்கக் கடலில் வந்தெழுந்த
உண்ணா நஞ்சம் உண்டானைக்
கும்பிட் டுருகுஞ் சிந்தையுடன்
பண்ணார் பதிகத் தமிழ்பாடிப்
பணிந்து பரவிப் பணிசெய்தார்.
- திருநாவுக்கரசர் புராணம் - 313.
---------- --------- ---------
நான்காம் திருமுறை.
தலம் - திருவண்ணாமலை.
63 வது திருப்பதிகம்.

பாடல் எண் : 1
ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே
ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே
நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே.

விளக்க உரை :ஓதி மா மலர்கள் தூவி உமையவள் பங்கா :
ஓதி மா மலர்கள் தூவி - எல்லாம் வல்ல சிவபரம்பொருளின் தூய நல்திரு நாமம் ஓதியும், அருளாளர்கள் அருளிச்செய்த திருமுறைகள் மற்றும் சாத்திர நூல்கள் ஓதியும், வேதங்கள் ஓதியும் மனம்,மொழி, மெய்களால் ஒன்றி பூசனைக்கு உண்டான தகுந்த நறுமலர்களை கொண்டு அர்ச்சித்தும் வழிபடல் வேண்டும்.
"எந்தெந்த மலர்களை கொண்டு, எக்காலத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று ஸ்ரீ கமலைஞான பிரகாசர் அருளிச்செய்துள்ள புட்பவிதி என்னும் நூலில் காணலாம்."

உமையவள் பங்கா - உமையன்னை தவம் செய்து இறைவனின் ஒரு பாகத்தை பெற்ற தலம் திருவண்ணாமலை ஆகும்.
உமையன்னைக்கு தன்னில் ஒரு பாகத்தை அளித்து உண்ணாமலை யஉமையாளொடு உடனாகிய ஒருவனாகிய பெருமான்.

மிக்க சோதியே துளங்கும் எண்தோள் சுடர் மழுப்படையினானே :
மிக்க சோதியே - சுடர்விட்டெரியும் சோதியாக விண்ணும், மண்ணும் நிறைந்து விளங்கும் அண்ணாமலை அண்ணலே..

துளங்கும் எண்தோள் சுடர் மழுப்படையினானே - அழகாக விளங்கும் எட்டு தோள்களுடன் ஒளிவீசுகின்ற கூர்மையுடைய மழுவினை ஆயுதமாக கொண்டவரே..

ஆதியே அமரர் கோவே அணி அண்ணாமலை உளானே :
ஆதியே அமரர் கோவே - அனைத்திற்கும் ஆதி மூர்த்தியே, முப்பத்து முக்கோடி தேவர்களின் அரசராக விளங்குபவரே..

அணி அண்ணாமலை உளானே - இது அடி அண்ணாமலையினை குறித்தது இல்லை.
தமது அடியவர்கள் அணுகி வழிபடும் படியும் மற்றோர் அணுக இயலாதபடி இருப்பவரான அண்ணாமலை அண்ணல் ஆகும்.

நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே :
வேத, ஆகமங்கள் விதித்தபடியும், திருமுறைகள் ஓதியும் விதித்த நெறிகள்படியும் உம்மை வழிபடுவதை தவிர அடியேன் வேறெதையும் சிந்தனை செய்வதில்லை. இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்கும் மெய்த்தொண்டன் அடியேன்.
------- --------- --------
முழுவதும் ஓர் தொகுப்பாக:

எல்லாம் வல்ல சிவபரம்பொருளின் தூய நல்திரு நாமம் ஓதியும், அருளாளர்கள் அருளிச்செய்த திருமுறைகள் மற்றும் சாத்திர நூல்கள் ஓதியும், வேதங்கள் ஓதியும் மனம்,மொழி, மெய்களால் ஒன்றி பூசனைக்கு உண்டான தகுந்த நறுமலர்களை கொண்டு அர்ச்சித்தும் வழிபடுகிறோம்.
உமையன்னைக்கு தன்னில் ஒரு பாகத்தை அளித்து உண்ணாமலை யஉமையாளொடு உடனாகிய ஒருவனாகிய பெருமானே..
சுடர்விட்டெரியும் சோதியாக விண்ணும், மண்ணும் நிறைந்து விளங்கும் அண்ணாமலை அண்ணலே..
அழகாக விளங்கும் எட்டு தோள்களுடன் ஒளிவீசுகின்ற கூர்மையுடைய மழுவினை ஆயுதமாக கொண்டவரே..
அனைத்திற்கும் ஆதி மூர்த்தியே, முப்பத்து முக்கோடி தேவர்களின் அரசராக விளங்குபவரே..
அடியவர்கள் எளிதில் அணுகி வழிபடும் படியும் மற்றோர் அணுக இயலாதபடி இருப்பவரான அண்ணாமலை அண்ணலே..
வேத, ஆகமங்கள் விதித்தபடியும், திருமுறைகள் ஓதியும் விதித்த நெறிகள்படியும் உம்மை வழிபடுவதை தவிர அடியேன் வேறெதையும் சிந்தனை செய்வதில்லை. தேவரீர் அடியோங்களை காத்தருளுங்கள்.
------- -------- ------

*தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது*
*பெட்டப் பிணமென்று பேரிட்டுக் கட்டி*
*எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே*
*நெடுங்களத்தான் பாதம் நினை.*

நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம் எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்

அகிலம் காக்கும் அண்ணாமலையார் பொற் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் ஈசரே 🙏🙏🙏

உலகின் முதல்வர் எம் பெருமான் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்

ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தையே ஆத்ம நமஸ்காரம்

⚜️📿📿📿⚜️
29/08/2021

⚜️📿📿📿⚜️

📿📿📿ஊர் ஆகி நின்ற உலகே, போற்றி!ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!பேர் ஆகி எங்கும் பரந்தாய், போற்றி!பெயராது என் சிந்தை ப...
22/07/2021

📿📿📿ஊர் ஆகி நின்ற உலகே, போற்றி!
ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
பேர் ஆகி எங்கும் பரந்தாய், போற்றி!
பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
நீர் ஆவி ஆன நிழலே, போற்றி!
நேர்வார் ஒருவரையும் இல்லாய், போற்றி!
கார் ஆகி நின்ற முகிலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!📿📿📿📿

சிவன் என்ற சொல்லுக்கு மரணமில்லாத, மாறாத, காலமற்ற, உருவமற்ற, பிரபஞ்சத்தின் முழுமையான சாரம் என்று பொருள்.📿📿📿📿அன்பின் உறைவி...
22/07/2021

சிவன் என்ற சொல்லுக்கு மரணமில்லாத, மாறாத, காலமற்ற, உருவமற்ற, பிரபஞ்சத்தின் முழுமையான சாரம் என்று பொருள்.📿📿📿📿
அன்பின் உறைவிடமான
பரமாத்மாவும் நீயே...!
💥💥💥💥💥💥
அகோரியாய் வாழும்
இடுகாட்டு பித்தனும் நீயே ..!

தாண்டவம் ஆடும்
சடையனும் நீயே ..!

தாள்பணிந்தாரை
ஆட்கொள்ளும்
தலைவனும் நீயே...!

நாதியற்றவர்களின்
நாதனும் நீயே...!

நயவஞ்சகர்களின்
நரனும் நீயே...!

பிட்டுக்கு மண் சுமந்த
பெருமாளும் நீயே...!

பிறையை தரித்தருளும்
பிறைசூடனும் நீயே..!

நெற்றிக் கண்ணைக் கொண்ட
ருத்திரனும் நீயே...!

தேவர்களுக்காக நஞ்சுண்ட
நீலகண்டனும் நீயே..!

சக்திக்கு சரிபாதியளித்த
அர்த்தநாதீஸ்வரன் நீயே...!

சாம்பலில் குளிக்கும்
சாம்ப சிவனும் நீயே ...!

மானசீகமாக மனதில்
நான் வணங்கும்
சுயம்பு லிங்கமும் நீயே..!

சிலையாய் நான் துதிக்கும்
நடராஜரும் நீயே..!

விதி விளையாடும் போது
மதியாய் வருவாய்..!

மதியும் தோற்கும் வேளை
கர்மவினைப் பயனையும் தருவாய்..!

உன்னை தொழுவோர்க்கு
மோட்சங்கள் உண்டு...!

உன்னால் பலருக்கு
சாபவிமோச்சனங்களும் உண்டு...!

பாவத்தை அழிக்கும் மாமுனியே..!
முக்திக்கு வழி வகுக்கும் உன் பணியே..!

அன்பே சிவனே - எம்
தாயுமானவன் நீயே...!
📿📿📿📿🔥🔥🔥🔥🔥🔥🔥

📿📿📿சிந்தனையற்ற தனிமை வேண்டும் மனம் மரத்திட வேண்டும். தன்னிலை மறந்திருக்க வேண்டும் மயக்கம் அறுத்திட வேண்டும். உள்ளொளி பெர...
22/07/2021

📿📿📿சிந்தனையற்ற தனிமை வேண்டும் மனம் மரத்திட வேண்டும். தன்னிலை மறந்திருக்க வேண்டும் மயக்கம் அறுத்திட வேண்டும். உள்ளொளி பெருக வேண்டும் உண்மை நிலை அறிய வேண்டும். உன்னுடன் கலக்க வேண்டும் சிவமாகவே மாறிட வேண்டும்...🔱🔱🔱🔱

Address

Theni

Telephone

+919626761038

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aathi adiyavan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aathi adiyavan:

Share

Category