Impressive Clickers

Impressive Clickers "Learning to see is not about having open eyes; it's about having an open mind."

“A picture is a secret about a secret, the more it tells you the less you know.”
― Diane Arbus

05/09/2024
Sri kotravalishwarar - Koviloor, karaikudi
23/08/2024

Sri kotravalishwarar - Koviloor, karaikudi

Happy World Photography Day - 2024thanks to 'The Showman & the Inventor'Louis Daguerre & Nicephore Niepce - 1839 -The ki...
19/08/2024

Happy World Photography Day - 2024
thanks to
'The Showman & the Inventor'
Louis Daguerre & Nicephore Niepce
- 1839 -

The kind of photography we know today dates back to 1839. At that time, the French Academy of Sciences announced the Daguerreotype process. The process made it possible to create a highly detailed image on a sheet of copper. The sheet was coated with a thin coat of silver, and the process did not require the use of a negative. It became the first method for obtaining a permanent image with a camera.

I have read that it helps to look at other photographers’ photos to improve my photography. I try to do this as often as possible. I recently realized that my favorites were a lot like mine in that they had a particular interest. Seeing how they captured theirs helped me figure out how to capture mine. Now that I’m out looking for the best way to take my picture, all I have to remember is to hit the shutter.

I think my photography has evolved since I was 17. I also sell some of my paintings now. It’s a really great feeling to see someone else like my paintings and want one for themselves.

It is my sincere wish that what I have shared will help you in your photography. Happy shooting!

இன்று உலக யானைகள் தினம். ௧௨ - அ - ௨௦௨௪.  [ 12-08-2024.]திங்கள்கிழமை.   காடு செழிக்க யானைகளை வாழ விடுங்கள்!'' யானை ஆசாரவா...
12/08/2024

இன்று உலக யானைகள் தினம்.
௧௨ - அ - ௨௦௨௪. [ 12-08-2024.]
திங்கள்கிழமை.

காடு செழிக்க யானைகளை வாழ விடுங்கள்!

'' யானை ஆசாரவாசலைக் காக்கும்,
பூனை புழுத்த மீனைக் காக்கும்''

''யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்''

என்னும் பழமொழிகள் யானையின் மேன்மையையும் மதிப்பையும் குறிக்கும் ஆழமான பொன்மொழிகள் .

உலகில் இதுவரை ௨௨ வகை யானை இனங்கள் அழிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

குரங்கு பெடல் படத்தில்,ஒரு காட்சியில்,சிறுவன் மாரியப்பனை அவனின் வாத்தியார் சைக்கிள் ஓட்ட சொல்லும்போது,மாரியப்பன் குரங்கு...
25/07/2024

குரங்கு பெடல் படத்தில்,

ஒரு காட்சியில்,

சிறுவன் மாரியப்பனை
அவனின் வாத்தியார் சைக்கிள்
ஓட்ட சொல்லும்போது,
மாரியப்பன் குரங்கு பெடல் போட,

வாத்தியார்,

"என்னடா பண்ற"
என்று கேட்டதும்,
"குரங்கு பெடல் போட்றேங்க"
என்று சொல்வான்..

அதற்கு வாத்தியார்,
"ஏய்.. சீட்டு சீட்டு மேல உக்காந்து ஓட்டுறா"
என்று சொல்வார்..

மாரியப்பன்,
"இன்னும் பழகலைங்க"
என்று சொல்லும்போது,

"இதுக்கு தனியா ஜோசியம் பாப்பாங்களா ஏறி உக்காந்து ஓட்றா.."
என்று தைரியம் சொல்லும்போது,
சிறுவன்,

"கால் எட்டாதேங்க" என்பான் பாவமாக..
வாத்தியார்,

"நீச்சல் பழகுனதுக்கப்புறம் கால் எட்ல ன்னு கத்திட்டா இருப்ப.. அந்த மாதிரி தான்டா எல்லாமே..பழகுனா எல்லாம் சரியா போயிடும்.. மேல உக்காந்து ஓட்டு"
என்று சொன்னதும்,

மாரியப்பன் வாத்தியார் கொடுத்த தைரியத்தில் கொஞ்ச தூரம் சீட்டின் மேல் உட்கார்ந்து ஓட்டுவான்..

சில நொடிகளில்,
பயம் வந்தவுடன் "சார்"
என்று அலறும் போது,

வாத்தியார்,

"ஆரம்பிச்சதுக்கு அப்புறம் திரும்பி பார்க்க கூடாது போயிட்டே இருக்கணும்"
என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே நடந்து செல்வார்..

அந்த நொடியில் இருந்து அவன் சீட்டின் மீது உக்காந்து சைக்கிள் ஓட்டுவான்..

சிறுவயதில் சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் பெரும்பாலும் தைரியத்தை தன்னம்பிக்கையை அள்ளிக் கொடுக்கின்றனர்..

ஆனால் சற்று வளர்ந்த பின்பு சமூகம் போட்டி பொறாமை சாதி மதம் பணம் என ஒருவனே கீழே தள்ளி விட்டு அவமானப்படுத்தி சிரிக்கவே
அதிகம் ஆசைப்படுகிறது..

சொந்தக்காலில் நின்று கொஞ்சம் கீழே விழுந்தால் கூட,
"நான் அப்பவே சொன்னேன்" என்று ஆரம்பிக்கிறது..

புடிச்ச வேலையை செய்யப் போறேன் என்று சொன்னால் "உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை" என்று சிரிக்கிறது..

உண்மையில் சிலநூறு ஆண்டுகளுக்குப் பின்பு நாம் வாழ்ந்ததற்கான எந்த தடயங்களும் இருக்கப் போவதில்லை..சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு பூமி என்று ஒரு கிரகம் இருந்ததற்கான ஆதாரமே இருக்கப் போவதில்லை.. இந்தப் பிரம்மாண்டப் பிரபஞ்சப் பெருவெளியில் நாம் எல்லோரும் அன்று கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு துகள்கள் தான்..

போட்டி பொறாமை வஞ்சம் சாதி மதம் பணம் என தேவையில்லாத சில்லரை மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு,

அடுத்தவர்கள் தோல்வியடையும் போது தோள் கொடுப்போம்..

மற்றவர்கள் வெற்றி பெறும் போது,
மனதார வாழ்த்துவோம்..

நிச்சயம் நம் வெற்றிக்கான நமக்கான நாள் வரும் பொழுது அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடிகரம்..✨

மீள் பதிவு Lankavisiri canada

Documentary on Trotsky Marudu Maruthappan sir
19/06/2024

Documentary on Trotsky Marudu Maruthappan sir

Unveiling Trotsky Marudu: The Indian Picasso Who Shaped Contemporary Art for 70 Years S...

Holy Cross College PG Department of Social Work, Collaboration with alaihal MEDIA SUMMER PLACEMENT onSocial Analysis & D...
08/06/2024

Holy Cross College PG Department of Social Work, Collaboration with alaihal MEDIA SUMMER PLACEMENT on
Social Analysis & Documentary Film Making workshop

Summer Course for Religious @ Alaihal Media, Trichy.
05/06/2024

Summer Course for Religious @ Alaihal Media, Trichy.

Photo walk discussion @ Puliancholai
30/05/2024

Photo walk discussion @ Puliancholai

From Trichy to KodapakkamM.K. Thyagaraja Bhagavathar, Sivakarthikeyan (S.K.) Saravanakumar (T.S.K) Now kavin (P.S.K) Peo...
10/05/2024

From Trichy to Kodapakkam

M.K. Thyagaraja Bhagavathar,
Sivakarthikeyan (S.K.)
Saravanakumar (T.S.K)

Now

kavin (P.S.K) People

| | | | | | | |

அப்பா கேரக்டர் Actor. LAL எப்போதும் போல பின்னி பெடல் எடுத்து இருக்காரு,
ஒளிப்பதிவு செம்ம... Bombay Location footage Wow...

எடிட்டர் cuts பிரமாதம் அதுவும் கவின் கண்ணாடி முன்னாடி நின்னு பிளாஷ் பேக் போற சீன் வட்டம் போட்டு கேமரா சுழல எடிட்டர் அந்த இடத்துல மாஸ் கட்டி இருப்பாரு

costume Designer ஒர்க் பாராட்டக்கூடிய ஒன்று

கனவை நோக்கி ஓடிய பல சாமானிய மக்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும்

துள்ளலாக திரியும் பள்ளி மாணவன் துவங்கி, தன்னையே தொலைத்த ஒருவனாக விரக்தியில் கத்துவது வரை பற்பல உணர்வுகளை கொட்டித் தீர்த்திருக்கிறார்.

இன்று உலக புத்தக தினம். 📘வாசிப்பின் மகத்துவம் பற்றி எழுத்தாளர் உதயசங்கர் ஒரு புத்தகம் என்ன செய்யும்?1. ஒரு புத்தகத்தை வா...
23/04/2024

இன்று உலக புத்தக தினம். 📘

வாசிப்பின் மகத்துவம் பற்றி எழுத்தாளர் உதயசங்கர்

ஒரு புத்தகம் என்ன செய்யும்?

1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விடயங்கள் நமக்குத் தெரியவரும்.
2. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும்.
3. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லிமீட்டராவது விசாலமாகும்.
4. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்.
5. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.
6. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும். பிரபஞ்ச மனிதனாக உணரமுடியும்.
7. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்
8. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல்பார்வை உருவாகும்.
9. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சனாதனத்துக்கும் மரபுக்கும் நவீனத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்.
10. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது வரலாற்றுக்கும் புராண இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.
11. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.
12. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காக்கை குருவி, கடல், மலை, என்று இயற்கையை ஆராதிக்கத்தோன்றும்.
13. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காதலின் ஊற்றுக்கண் பொங்கிப்பிரவகிக்கும்.
14. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சாதி, மதத்தின் பின்னுள்ள சதிவலையைப் புரிந்து கொள்ள முடியும்.
15. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகத்தின் மீது விரிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சதிவலையைத் தெரிந்து கொள்ள முடியும்.
16.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது பார்க்கிற அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்பு கொள்ளத் தோன்றும்.
17. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சமத்துவமற்ற, ஏற்றதாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின்மீது கோபம் பொங்கும்.
18. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பினை மாற்றத்தோன்றும்.
19. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகினை மாற்றப் புரட்சி செய்யவும் அதற்காக ஆயுதம் ஏந்தவும் தோன்றும்.
20. புத்தகம் மனிதகுலத்தின் அறிவுச்சொத்து. வாசியுங்கள்! வாசியுங்கள்! வாசியுங்கள்!

உலக புத்தகதின வாழ்த்துக்கள்!

Address

Tiruchirappalli

Telephone

+919843646602

Website

Alerts

Be the first to know and let us send you an email when Impressive Clickers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Impressive Clickers:

Share

Category