Manickam Susai

Manickam Susai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Manickam Susai, Photographer, Nalattinputhur, Tuticorin.

03/02/2025

HAIL MARY FULL OF GRACE
ST.MICHAEL'S CATHOLIC CHURCH SHARJAH,UAE

*🌻 காலை ஜெபம்**ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச்...
31/12/2024

*🌻 காலை ஜெபம்*

*ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.*

*அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!*

*அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!*

*ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!*

*அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.*

(திருப்பாடல்கள் 105:1-5)

*படைப்புகளின் பரம்பொருளே! உயிர்களின் ஊற்றே இறைவா! உம்மை புகழ்ந்து ஆராதிக்கின்றேன். இந்த இனிய காலை வேளையில் உம்மை நினைத்து ஜெபிக்கும் வரம் தந்த மேலான இரக்கத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.*

*இன்றைய நாளை ஆசீர்வதியும் அப்பா. இன்று நான் கையிட்டு செய்கின்ற செயல்களை, கடமைகளை ஆசீர்வதியும். நான் காண்கின்ற நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அயலார்களையும் நிறைவாக ஆசீர்வதியும் அப்பா.*

*அன்பு ஆண்டவரே! கடந்து செல்ல இருக்கும் ஆண்டை நினைத்து பார்க்கின்றேன். எத்தனையோ வலிகள், துன்பம், இழப்பு, வேதனைகள். ஆனாலும் அப்பா! இந்த ஆண்டு முழுவதும் என்னை, உமது வல்லமையால் வழிநடத்தி பாதுகாத்த, உமது இரக்கத்தை நினைத்து பார்க்கின்றேன். எத்தனையோ இடர்பாடுகள் வந்தபோதிலும், நீர்தாமே என்னுடன் கூடவே இருந்து, எனக்கு தேவையான ஞானத்தையும், உடல் ஆரோக்கியத்தையும், பொருளாதார தேவைகளையும், சமாதானத்தையும் தந்து காத்து, வழிநடத்தியதற்காக நன்றி அப்பா!*

*ஆண்டவரே! விடியலுக்காக காவலர் காத்திருப்பது போல, வருகின்ற ஆண்டினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். பிறக்க இருக்கும் புதிய வருடம், ஆசீர்வாதம் நிறைந்த ஆண்டாக எங்களுக்கு இருக்க வேண்டி, தாழ்பணிந்து பிரார்த்தனை செய்கின்றோம்.*

*இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.*

*ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;* *ஆண்டவரைப் போற்றிப் பாடு...
25/12/2024

*ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;*

*ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.*

*பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.*

*விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.*

*வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.*

*ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்.*

(திருப்பாடல்கள் 96:1-3, 11-13)

*மனிதனாக உருவெடுத்த தெய்வமே! உமக்கே ஆராதனையும், மகிமையும், மாட்சியும் என்றென்றும் உரித்தாகுக...*

*குழந்தையாய் மண்ணில் உதித்த இறைவா! நாங்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியோடும், மன அமைதியுடனும், உள்ள அக்களிப்புடனும், இன்று கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட இருக்கின்றோம். இந்த நாட்களில் எங்களை ஆசீர்வதியும்.*

*விண்ணிலிருந்து மண்ணகம் வந்த தெய்வமே! உமது பிறப்பில் இந்த உலகம் மகிழ்கின்றது, வானக தூதர்கள் அணியணியாக உம்மை புகழ்ந்து பாடுகின்றனர். விண்ணகமும், மண்ணகமும் ஒரே நேரத்தில் ஆர்ப்பரிக்கின்றது. கூடவே சேர்ந்து நாங்களும் உம்மை புகழ்கின்றோம்.*

*இதோ உமது மனித பிறப்பில் மகிழும் நாங்கள், இந்த மனித பிறப்பு எங்களுக்காக பாடுகள் படவே என்பதை நாங்கள் உணரச் செய்தருளும்.*

*அன்பின் உருவே! இந்நாளில் எங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் நீர் பிறக்க வேண்டும், உலகிற்கு ஒளியாக வந்தவரே! இருளாகிபோன எங்கள் வாழ்வில், நீர் ஒளியேற்ற வேண்டும்; மங்கிய எங்கள் வாழ்வில் புத்துணர்ச்சி அளிக்க வேண்டும், நீர் எங்களோடு எந்நாளும் இருக்கின்றீர் என்ற நம்பிக்கை எங்களை திடப்படுத்த வேண்டும்.*

*ஆண்டவரே! இந்நாளில் வானிலிருந்து நீர் பொழிந்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜெபம் செய்கிறோம். அவர்களின் உள்ளத் துயரங்கள் நீங்க வேண்டும். நீரே அவர்களுக்கு தாயும், தந்தையுமாக இருந்து ஆறுதல் அளிக்க வேண்டும் அப்பா.*

*இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.*

*💐 அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் 💐*

15/12/2024
04/02/2024

✝️அன்னை‌ மரியாளின் பரிசுத்தம்!

04/11/2023
22/09/2023

*சிறு செபம்*❣️

Address

Nalattinputhur
Tuticorin
628716

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manickam Susai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manickam Susai:

Share

Category