MY WORLD S.m.riyas

09/04/2024
2021-22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் தாஜ்மகாலை பின்னுக்குத் த...
01/10/2022

2021-22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் தாஜ்மகாலை பின்னுக்குத் தள்ளி மாமல்லபுரம் சிற்பங்கள் முதலிடத்தை பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் 5 இடத்தை புகழ்பெற்ற செஞ்சி கோட்டை பிடித்துள்ளது.

இந்தியாவில் வெளிநாட்டவரால் அதிகம் பார்க்கப்பட்ட 10 இடங்களில் 5 தமிழகத்தில் உள்ளன. தாஜ்மகாலை கடந்து தமிழ்நாட்டின் அடையாளங்களை உலகம் அங்கீகரிக்கத் தொடங்கியிருப்பது நமக்கு பெருமை!

World...
16/09/2022

World...

16/09/2022

*_பள்ளி செல்வதால் பரவுகிறது 'ப்ளூ' காய்ச்சல்: பெற்றோர் எச்சரிக்கையாக செயல்பட அறிவுறுத்தல்_*

"தற்போது, 'ப்ளூ' வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுவதால், கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பள்ளி செல்ல ஆரம்பித்துள்ள மழலையர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்," என, சென்னை அப்பல்லோ மருத்துவமனை குழந்தைகள் நல டாக்டர் ஜெயகுமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: திடீர் வெயில், திடீர் மழை என, சீதோஷ்ண நிலை மாறி வருவதால் வைரஸ் காய்ச்சலின் வேகம் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாண்டு காலத்தில், மழலையரும், மாணவர்களும் வீட்டுக்குள் இருந்ததால் எல்லா வகையான காய்ச்சலில் இருந்தும் பாதுகாப்பாக இருந்தனர்.தற்போது கூட்டமாக பள்ளி செல்ல ஆரம்பித்துள்ளனர். திடீர் சீதோஷ்ண மாற்றத்தால் ஏற்பட்ட வைரஸ் தாக்கம், காற்றின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவுகிறது. குறிப்பாக மழலை பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

*_எச்.1 என்.1_*
காய்ச்சல் வந்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல், திரவ உணவுகளை நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். போதுமான ஓய்வும் அவசியம். ஐந்து வயது குழந்தைக்கு அதிக காய்ச்சல் வந்தால் வலிப்பு வரும். குழந்தை மூச்சுவிட கஷ்டப்பட்டால், சாப்பிடாமல் இருந்தால், வாந்தி எடுத்தால், தொடர்ந்து இருமினால் மருத்துவமனையில் சேர்ப்பது நல்லது. மூன்று, நான்கு நாட்கள் கழித்து காய்ச்சல் சரியாகலாம். வைரஸில் ஒருவகை எச்.1 என்.1 வைரஸ்.இந்த வகை காய்ச்சலை பார்த்து பயப்பட வேண்டியதில்லை. காய்ச்சல் தொடர்ந்தால் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த வைரஸ் நுாறாண்டுகளாக உள்ளது. இதற்கு மருந்துகளும் உள்ளன.

*_கண்டறிவது எப்படி?_*

ஒரு வீட்டில் ஒருவருக்கு, 'ப்ளூ' காய்ச்சல் வந்தால் எல்லோருக்கும் வரும். சளி, இருமல் இருக்கும். டெங்கு காய்ச்சலில் வயிற்றுபோக்கு, இருமல் அவ்வளவாக இருக்காது. அதிக காய்ச்சல், தலைவலி, சோர்வு, காய்ச்சலில்லாத நேரம் சோர்வு இருக்கும். காய்ச்சல் குறைந்த, 3வது நாளில் சோர்வு அதிகமாக இருந்தால் டெங்கு காய்ச்சலா என, ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பிற நோய்கள் இருந்தால், காய்ச்சலின் போது மருத்துவ கண்காணிப்பு அவசியம். *_எச்.1. என்.1 வைரசுக்கு தடுப்பூசி உள்ளதால் குழந்தைகளை பாதுகாக்கலாம்..._*

Address

Villupuram
Villupuram
605401

Telephone

+919789694723

Website

Alerts

Be the first to know and let us send you an email when MY WORLD S.m.riyas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MY WORLD S.m.riyas:

Share

Category