KJ Lens

KJ Lens Photos & Verses

மூடுபனியில் மூச்செடுக்கும் மலைநாடு,மௌனமாக விடியலை வரவேற்கிறது.அதன் மடியில் வாழும் ஒரு தாய்தேயிலைப் பறிக்கும் வயதானவள்.நெ...
28/07/2026

மூடுபனியில் மூச்செடுக்கும் மலைநாடு,
மௌனமாக விடியலை வரவேற்கிறது.
அதன் மடியில் வாழும் ஒரு தாய்
தேயிலைப் பறிக்கும் வயதானவள்.

நெற்றியில் பூசிய விபூதி,
தலையில் தொங்கும் தேயிலைப் பை,
வாழ்க்கைச் சுமையைத் தாங்கும் தோள்.

மழை பெய்தாலும் அவள் கை ஓய்வதில்லை,
வெயில் சுட்டாலும் அவள் நடை தளர்வதில்லை.
குடும்பத்தின் பசியே
அவளை நாளும் நடத்துகிறது.

உலகம் ரசிக்கும் ஒரு கோப்பைத் தேநீருக்காக,
அவள் வாழ்நாளையே கொழுந்துகளோடு பறிக்கிறாள்.
தேநீரின் மணத்தில் யாரும் உணர்வதில்லை
அவள் வியர்வையின் வாசனையையும்,
மௌனக் கண்ணீரின் உப்பையும்.

உழைப்பால் உலகை இனிக்கச் செய்பவள்,
தன் வாழ்க்கையை மௌனமாகச் சுமக்கும்
மலைநாட்டின் மௌனக் காவியம்.

அடர்ந்த மழைமுகில் கொண்ட வானம்,அவசரமாய் ஓடும்  காலை நேரம்…பஸ்ஸின் கடைசி ஆசனத்தில்யன்னல் இருக்கை எனக்கென ஒரு உலகம்.இனம் தெ...
14/07/2026

அடர்ந்த மழைமுகில் கொண்ட வானம்,
அவசரமாய் ஓடும் காலை நேரம்…
பஸ்ஸின் கடைசி ஆசனத்தில்
யன்னல் இருக்கை எனக்கென ஒரு உலகம்.
இனம் தெரியாத முகங்கள் பல,
ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் கதைகள்…
யாரும் பேசாத அந்த அமைதியில்
மழைத்துளிகள் மட்டும் உரையாடின.
கொட்டும் மழையை ரசித்தபடி
கண்ணாடி வழியே நகரும்.

மாலை நேரத்தின் நினைவுகள்மாலை நேரம்…தனிமையில் நின்று ரசிக்கும் ஓர் அழகிய தருணம்,ஓங்கி எழும் கடலின் அலை ஓசையும்,அமைதியை கல...
13/07/2026

மாலை நேரத்தின் நினைவுகள்

மாலை நேரம்…
தனிமையில் நின்று ரசிக்கும் ஓர் அழகிய தருணம்,
ஓங்கி எழும் கடலின் அலை ஓசையும்,
அமைதியை கலைக்கும் இனிய இசையாய் கேட்கிறது.

தூரத்தில் மிதக்கும் கப்பல்களும்,
செக்கச் சிவந்த வானத்தின் நிறங்களும்,
இயற்கை வரைந்த ஓர் ஓவியமாய்
கண்களை கவர்ந்து நிற்கின்றன.

வயது முதிர்ந்த அந்தத் தாயவள்,
வாழ்வின் பல பாதைகளை கடந்தவள்,
எந்த வார்த்தையும் பேசாமல்…
அந்த அழகை வெகு நேரம் ரசித்தபடி நிற்கின்றாள்.

அவள் கண்களில் தெரிந்தது கடல் அல்ல,
கடந்து வந்த காலத்தின் நினைவுகள்…
அவள் மனதில் ஒலித்தது அலை அல்ல,
அமைதியாக மறைந்துபோன வாழ்க்கையின் கதைகள்.

-KJ-

Address

Batticoloa
Colombo

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when KJ Lens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share