20/11/2015
🔊🔊🔊தேசிய அரசின் முதலாவது வரவு–செலவுத் திட்டம் – முழு விபரம்
💯💢💯💢💯💢💯💢💯💢
👉 02.00 PM – தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் நிதி ஆண்டுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.
👉 02.02 PM – சபாநாயகர் கருஜயசூரிய மன்றுக்கு வருகை
👉 02.03 PM – 2016 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பிக்கின்றார்.
👉 02.05 PM – தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் நிதி ஆண்டுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சபையில் முன்வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
👉 02.07 PM – 2015 ஆம் ஆண்டு 8 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்நாட்டின் திருப்பு முனையாக அமைந்தது.
👉 02.10 PM – ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
👉 02.15 PM – எம்.பி. மஹிந்த ராஜபக்ஷ மன்றுக்கு வருகை தரவில்லை.
👉 02.17 PM – பத்து இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
👉 02.20 PM – எதிர்காலத்தில் பலமான பொருளாதாரம் அவசியமாகும்.
👉 02.24 PM – கடந்த பத்து மாதங்களில் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
👉 02.27 PM – 2004 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நாட்டு மக்களின் முக்கிய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.
👉 02.30 PM – கடந்த கால ஆட்சியில் நாட்டின் கடன் மாத்திரமே உயர்ந்துகொண்டிருந்தது.
👉 02.33 PM – ராஜபக்ஷ யுகம் நாட்டில் மீண்டும் வரக் கூடாது.
👉 02.37 PM – கடந்த ஆட்சியில் வீதி அபிவிருத்திக்காக உலக நாடுகளிடம் கூடுதலாக கடன் பெறப்பட்டுள்ளது.
👉 02.40 PM – 2014 ஆம் ஆண்டில் தேசிய உற்பத்தி நூற்றுக்கு 10 வீதமாக குறைந்துள்ளது.
👉 02.45 PM – எதிர்கால வரவு செலவுத் திட்டத்தை தற்போது முன்வைக்கின்றேன்.
👉 02.48 PM – கடந்த பத்து மாதங்களில் நாட்டில் இருந்த பொருளாதார பிரச்சினையை கண்டுப்பிடித்துள்ளோம்.
👉 02.53 PM – மஹிந்த ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் நாம் நல்ல பாடத்தை கற்று கொண்டோம்.
👉 03.00 PM – புதிதாக அரசாங்க உத்தியோகத்தில் இணைந்து கொள்பவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்.
👉 03.05 PM – பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
👉 03.10 PM – டெங்கு, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
👉 03.15 PM – வீதி புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
👉 03.15 PM – சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் பாவனைக்கு நடவடிக்கை.
👉 03.20 PM – கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்தில் எரிபொருளுக்கு பதிலாக சூரிய சக்தியை பயன்படுத்த திட்டம்.
👉 03.22 PM – எமது வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்படும்.
👉 03.25 PM – சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் உதவி- 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
👉 03.30 PM – வன்னி, அம்பாறை பகுதிகளில் சிறிய வணிக நிலையங்களை அமைக்க திட்டம்.
👉 03.33 PM – தரமான விதையினங்களை உற்பத்தி செய்ய 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
👉 03.38 PM – இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் நம் நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை.
👉 03.41 PM – அதிக இரசாயன உரப்பாவனைகளால் சிறுநீரக நோய் ஏற்படுகின்றது. எனவே இரசாயன உரப்பாவனைகட்டுப்படுத்தப்படும்.
👉 03.43 PM – பழ வகைகள் மற்றும் மரக்கறி விவசாயம் செய்து ஏற்றுமதி செய்யும் தொழிலாளர்கள் வங்கியில் பெறும் கடன் உதவிக்கு வட்டி வீதம் குறைக்கப்படும்.
👉 03.45 PM – பழங்கள் மற்றும் மரக்கறி உற்பத்திக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
👉 03.46 PM – கீரி சம்பா 50 ரூபா, சம்பா 41 ரூபா, நாடு 38 ரூபா ஆகியன நிர்ணய விலை அடிப்படையில் அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும்.
👉 03.47 PM – மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி.
👉 03.48 PM – 400 கிராம் பால் மா பக்கற்றின் விலை 325 ரூபாவிலிருந்து 295 ரூபாவாக குறைப்பு.
👉 03.49 PM – புதிய தொழினுட்பத்தை கொண்ட மீனவ துறைமுகத்தை அமைப்பதற்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
👉 03.50 PM – தேயிலை உற்பத்தி துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விசேட குழு.
👉 03.52 PM – தேங்காய் உற்பத்திக்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
👉 03.54 PM – தேயிலை ஏற்றுமதியின் போது ‘சிலோன் டீ” என கட்டாயம் பெயரிட வேண்டும்.
👉 03.56 PM – பாக்கு உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம்.
👉 03.58 PM – “பொக்குரு கம்மான” திட்டத்தின் மூலம் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தல் : 21 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
👉 03.59 PM – வவுனியாவில் பொருளாதார வலயம் அமைக்கப்படும்.
👉 04.00 PM – அலங்காரமீன் கைத்தொழிலில் ஈடுப்படுவர்களுக்கு கடன் உதவி.
👉 04.01 PM – சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைபொருள் ஒழிப்புக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
👉 04.02 PM – தங்கம் மற்றும் மாணிக்க கற்கல் ஏற்றுமதி செய்ய விசேட பத்திரம்.
👉 04.03 PM – காட்டு யானைகளின் அச்சுறுத்தலை தடுக்க 4000 மில்லின் ரூபா ஒதுக்கீடு.
👉 04.04 PM – பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க திட்டம்.
👉 04.05 PM – அடுத்த வருடம் ஏப்ரல் முதல் இலங்கையில் வருடாந்தம் இரத்தினக் கல் ஏலம்.
👉 04.06 PM – கிராமசேவக பிரிவுகளை அபிவிருத்தி செய்ய 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
👉 04.07 PM – 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்.
👉 04.09 PM – இந்தியாவில் காணப்படும் ‘ஆதார்” திட்டம் போல் இலங்கையிலும் அமுல்படுத்தப்படும்.
👉 04.13 PM – 500 வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் முதலீட்டாளர்களுக்கு 50 வீத வரி.
👉 04.16 PM – புதிய முதலீட்டு சட்டம் அறிமுகம்.
👉 04.18 PM – எந்தவொரு வங்கி மூலமும் நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு.
👉 04.20 PM – இலங்கை பணம் வெளிநாடுகளில் உள்ளது. மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வரப்படும்.
👉 04.22 PM – வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 15 நாட்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
👉 04.25 PM – சொகுசு வரி முற்றாக நீக்கப்படும்.
👉 04.26 PM – குறைந்த வருமானம் பெறுபவர்கள் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் ஒரு இலட்சம் வீடுகள் அமைத்து குடியேற்றப்படுவர்.
👉 04.27 PM – அரச பாவனையற்ற காணிகளில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படும்.
👉 04.27 PM – ஏற்றுமதியை மேம்படுத்த அமைச்சர்கள் அடங்கிய குழு.
👉 04.30 PM – ஒரு தேர்தல் தொகுதியில் 1000 வீடுகளை அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
👉 04.31 PM – வெளிநாட்டு கட்டிட நிபுணர்கள் உள்நாட்டு கட்டிட நிபுணர்களுடன் இணைந்து செயற்படலாம்.
👉 04.31 PM – தொடர் மாடி வீட்டு திட்டத்துக்கு 100க்கு 40 வீதம் கடன் உதவி.
👉 04.33 PM – டயில்ஸ், கொங்ரீட் இறக்குமதி வரி நீக்கம்.
👉 04.35 PM – வீடுகள் அமைப்பதற்கு 7 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்.
👉 04.37 PM – கட்டத்துறை பயிற்சி பெறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு.
👉 04.40 PM – சார்க் நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டை வணிக மையமாக மாற்ற அழைப்பு.
👉 04.43 PM – கொழும்பு சர்வதேச நிதி கேந்திர நிலையத்தை டீ.ஆர் விஜேயவர்தன மாவத்தையில் அமைக்க திட்டம்.
👉 04.46 PM – திவிநெகும நிதியத்தை தேசிய சேமிப்பு வங்கியில் சேர்த்தல்.
👉 04.48 PM – உள்நாட்டு வங்கி கிளைகள் வெளிநாட்டில் திறக்கும் போது வங்கிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
👉 04.52 PM – புதிய வாகன பதிவு கட்டணங்கள் :முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளுக்கு 2000 ரூபா, காருக்கு 15000 ரூபா.
👉 04.56 PM – பாடசாலை மாணவர்களுக்கு 250 ரூபாவில் வங்கி கணக்குகளை ஆரம்பிக்கலாம்.
👉 05.01 PM – ஆடை, பாதணி மற்றும் மின்சார உபகரணங்கள் உட்பட 15 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு.
👉 05.05 PM – தனியார் ஊழியர்களின் வேலை நாட்களை ஐந்து வேலைநாட்களாக குறைக்க தீர்மானம்.
👉 05.08 PM – தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா அதிகரிக்க பரிந்துரை.
👉 05.10 PM – தொழிலாளர்களின் சம்பளம் தொழில் வழங்குனர்களினால் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம் அனுப்பட வேண்டும்.
👉 05.11 PM – ஆசிரியர்களுக்கு விடுதி செலவுக்கு 2 ஆயிரம் ரூபா.
👉 05.12 PM – மின்சாரம் இல்லாத பின்தங்கிய பாடசாலைகளுக்கு சூரிய சக்கதியிலான மின்சாரம்- 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
👉 05.11 PM – விஞ்ஞான, கணித பீடங்கள் இல்லாத பாடசாலைகளில் விஞ்ஞான கணித பீடங்களை அமைக்க 450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
👉 05.11 PM – அனைத்து பாடசாலைகளுக்கும் சிறந்த மலசலக்கூட வசதி
👉 05.12 PM – ஒரு வகுப்பில் அதி கூடுதலாக 35 மாணவர்கள் மாத்திரமே இருக்கலாம்.
👉 05.12 PM – உயர்தரப் பரீட்சைக்கு பின்னர் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி.
👉 05.15 PM – தொழினுட்ப பாடத்தை பல்கலைக்கழகங்களில் கற்க 5 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி.
👉 05.16 PM – கல்விக்கு 90 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
👉 05.17 PM – ஆயுர்வேத கல்வி உட்பட மேலும் புதிய கற்கை நெறிகளை ஆரம்பிக்க திட்டம்.
👉 05.18 PM – மாணவர்களின் சீருடைக்கு வர்த்தக பெறுமதியுடைய வவுச்சர்கள்.
👉 05.20 PM – புதிதாக இணையும் ஆசிரியர்களுக்கு முதல் 5 வருடங்களுக்குள் 2 வருட கட்டாயப் பயிற்சி.
👉 05.20 PM – 2018 இல் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதிகள் வழங்கப்படும்.
👉 05.21 PM – சிறப்பு கல்வித் திட்டங்களை ஆரம்பிக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
👉 05.21 PM – மஹாபொல பல்கலைக்கழகம் மாலபே பகுதியில் அமைக்கப்படும்.
👉 05.23 PM – பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலகு கொடுப்பனவு முறையில் மடிக் கணனி மற்றும் இலவச வைய் -பை முறை.
👉 05.25 PM – சிறுநீரக நோயாளிகளுக்கு மின்னேரியாவில் வைத்தியசாலை அமைக்கப்படும்.
👉 05.27 PM – குருநாகல், அநுராதபுரம் வைத்தியசாலைகளை புனரமைக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா.
👉 05.30 PM – பொலிஸ் பயிற்சி நிலையத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
👉 05.32 PM – நல்லூர் மற்றும் கண்டியில் புற்றுநோய் வைத்தியசாலைகள் அமைக்கப்படும்.
👉 05.34 PM – கேஸ் விலை 150 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைப்பு.
👉 05.35 PM – நாட்டில் இலவச வைய்- பை வலயங்களை அமைக்க 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
👉 05.35 PM – பொலிஸாரின் சம்பள பிரச்சினைக்கு 2 வருடத்தில் தீர்வு.
👉 05.37 PM – பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரிப்பு.
👉 05.39 PM – திகன, பதுளையில் விமான நிலையங்களை அமைக்க திட்டம்.
👉 05.41 PM – மத்தல விமான நிலையத்தில் விமான தொழில்சார் பயிற்சி நிலையம் ஆரம்பிக்க திட்டம்.
👉 05.43 PM – நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கு விசேட குழு நியமனம்.
👉 05.46 PM – ஸ்ரீ லங்கா எயார் லைன் சேவையில் அரசாங்க இடையூறுகள் இருக்காது.
👉 05.49 PM – தனியார் பஸ்கள் , முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு புதிய சட்ட ஒழுங்கு.
👉 05.52 PM – ரயில் பாதைகளை புனரமைக்க 1500 மில்லியன் ரூபா.
👉 05.55 PM – வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு நிர்ணய சம்பளம்.
👉 05.59 PM -11 அத்தியாவசிய பொருட்களின் விலை 100க்கு 20 வீதமாக குறைக்கப்படும்.
👉 06.05 PM – பெரிய வெங்காயம் அதி கூடிய சில்லறை விலை 85- 95 ரூபா.
👉 06.07 PM – 425 கிராம் ரின் மீன் 125 ரூபாவால் குறைப்பு.
👉 06.08 PM – சிறுவர்களுக்கான பால் மா 100 ரூபாவால் குறைப்பு .
👉 06.09 PM – நெத்தலி 418 ரூபாவாக குறைப்பு.
👉 06.10 PM – பருப்பு 169 ரூபாவாக குறைப்பு.
👉 06.11 PM – கட்டா கருவாடு 120 ரூபாவால் குறைப்பு.
👉 06.11 PM – கடலை கிலோ 169 ரூபாவாக குறைப்பு.
👉06.12 PM – கெசினோ, புகையிலை ஆகியவற்றுக்கு 25 வீதமாக வரி அதிகரிப்பு.
👉06.12 PM – வரி விலக்குகளை மறுபரிசீலனை செய்ய திட்டம்.
👉06.25 PM – 2016 ஆம் ஆண்டில் அஸ்பெஸ்டோஸ் சீட் பாவனையை முற்றாக நீக்க திட்டம்.
👉06.27 PM – ஆங்கில தொலைகாட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான வரி நீக்கம்.
💢💢💢💢💢💢💢💢💢💢